நெதர்லாந்தில் அதிகரிக்கும் கொரோனா - உலக போருக்கு பின் முதல் முறையாக ஊரடங்கு
பதிவு : ஜனவரி 25, 2021, 11:54 AM
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக போருக்கு பின் நெதர்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
நெதர்லாந்தில் அதிகரிக்கும் கொரோனா - உலக போருக்கு பின் முதல் முறையாக ஊரடங்கு

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக போருக்கு பின் நெதர்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.  இதன் காரணமாக தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறி வெளியே வருபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

சீன கடலில் முகாமிட்டுள்ள அமெரிக்க கப்பல்கள் - பதவியேற்ற சில நாட்களில் ஜோ பைடன் அதிரடி

தென் சீன கடல்பகுதியில் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் குழு அதிரடியாக நுழைந்துள்ளது. சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி தென் சீன கடலில் முகாமிட்டுள்ள அமெரிக்க போர் கப்பலால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் சீன கடல்பகுதியில் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்காக வழக்கமான ரோந்து பணியில் அமெரிக்க கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்று சில நாட்களில் அமெரிக்க கடற்படை மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, சீனா குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றம் இருக்காது என்பதையே உணர்த்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  

பெருக்கமடையும் பைரின் வகை குரங்குகள் -பார்வையாளர்களை கவர்ந்த தங்க நிற குட்டிகள்

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் அரிய வகை பைரின் இலை குரங்கு கூட்டத்தை வன பராமரிப்பாளர் கண்டறிந்துள்ளார். அழிந்துவரும் இந்த வகை குரங்குகளை பாதுகாக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தற்போது 11 தங்க நிற பைரின் குட்டிகள் உள்ள நிலையில் அவற்றின் எண்ணிக்கை ஏப்ரல் மாத‌த்திற்குள் இருபதை தொடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பைரின் மரத்தின் இலைகளை மட்டும் உண்டு வாழும் இந்த வகை குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாக்ஸ் உலக கோப்பை பனிசறுக்கு போட்டி - 20 வயதான அமெரிக்க வீராங்கனை சாதனை

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற லாக்ஸ் உலக கோப்பை பனிசறுக்கு போட்டியில் அமெரிக்க வீராங்கனை சோலோ கிம்(Chloe Kim) வெற்றி பெற்றுள்ளார். 89.75 புள்ளிகளுடன் கிம் முதலிடத்தையும், 76 புள்ளிகளுடன் ஜப்பான் வீராங்கனை ஓனோ மிட்சுகி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.20 வயதான  கிம், 2018 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்க‌து. கணுக்கால் அறுவை சிகிச்சை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பனிசறுக்கு போட்டிகளில் பங்கேற்காத நிலையில், தற்போதைய வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாக சோலோ கிம் தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

396 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

197 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

96 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

52 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

46 views

பிற செய்திகள்

டிக் டாக்கில் அசத்தும் 81 வயதான மூதாட்டி - இளைஞர்களுக்கு சவால் விடும் மூதாட்டி

உடற்பயிற்சியுடன் நடனமும் ஆடி இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடுத்து வருகிறார் ஜெர்மனியை சேர்ந்த 81 வயது மூதாட்டி . இது குறித்து விவரிக்கிறது. இந்த செய்தி தொகுப்பு.

11 views

போதைப்பொருள் மன்னனின் மனைவி கைது - விமான நிலையத்தில் அதிரடி

பிரபல மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாபோவின் மனைவியை அமெரிக்க காவல்துறை கைது செய்துள்ளது.

55 views

பள்ளி தோழனின் மூக்கை உடைத்த ஒபாமா

சிறு வயதில் இன ரீதியாக பேசிய பள்ளி தோழனின் மூக்கை உடைத்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

45 views

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை? ரஷ்யா மீது பைடன் எடுக்கும் முதல் நடவடிக்கை

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்​கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11 views

திரைக்கு வரும் டாம் அண்ட் ஜெர்ரி - கலக்க காத்திருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரம்

கார்ட்டூன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள கதாபாத்திரங்கள் டாம் அண்ட் ஜெர்ரி. எலி, பூனை கதாபாத்திரங்கள் சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு இன்றளவும் ரசிகர்கள் ஏராளம்

52 views

தப்பி ஓடிய நெருப்புக்கோழி - விரட்டிப் பிடித்த உரிமையாளர்

சீனாவின் குயாங்ஷி மாகாண சாலையில், நெருப்புக்கோழி ஒன்று ஓடும் காட்சி, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

66 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.