கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் சூதாட்டம்
பதிவு : ஜனவரி 23, 2021, 12:10 PM
சென்னையில் மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சென்னையில் மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...சென்னை தியாகராயநகரில் வசித்து வருபவர் ஜித்து... வட மாநிலத்தை சேர்ந்த இவர், அடிக்கடி ஹூக்கா பார்களுக்கு செல்லும் பழக்கம் உடையவர் என்று கூறப்படுகிறது.அவ்வாறு அங்கு செல்லும்போது, சுரேஷ் என்பவரின் நட்பு இவருக்கு கிடைத்துள்ளது. பழக்கத்தை தொடர ஆன்லைன் சூதாட்டத்தை ஜித்துவுக்கு, சுரேஷ்  அறிமுகம் செய்து வைத்துள்ளார்.இதனைத் தொடந்து, கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டு போட்டிகளிலும், தங்கத்தின் விலையேற்ற இறக்கத்துக்கும் பந்தயம் கட்டி விளையாடி வந்துள்ளார் ஜித்து....நாளடைவில் சூதாட்ட விளையாட்டு, வழக்கம்போல், விபரீதத்தில் முடிந்துள்ளது.பல லட்சம் ரூபாயை இழந்துவிட்டதாக ஜித்து போலீசில் புகார் அளித்த நிலையில், அமைந்தகரை போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தினர்.ஜித்துவின் நண்பர் சுரேசை போலீசார் விசாரித்தபோது, lotus book 237 என்ற பிரத்யேக இணைய தளம் வாயிலாக சூதாட்டம் அரங்கேறியது கண்டறியப்பட்டு உள்ளது.அந்த இணையதளத்தில் உள்ளே சென்று உறுப்பினராக வேண்டும் என்றாலே, லட்சங்களை கொட்ட வேண்டும் என்பதும் தெரிய வந்துள்ளது.இது மட்டுமின்றி, சென்னை முழுவதும் ஏராளமான வி.வி.ஐ.பி-கள் மற்றும் தங்க வியாபாரிகளும், இந்த இணையதளத்தை பயன்படுத்தி சூதாடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது, சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விரிவான விசாரணையில், இன்னும் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

468 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

237 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

89 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

87 views

பிற செய்திகள்

சிங்கப்பூர் விமானத்தில் தங்கம் கடத்தல்... ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

19 views

மாற்றங்களை கொண்டு வரும் பெண்களுக்கு வணக்கம் - நிப்பான் பெயிண்ட் குழுமம் அறிக்கை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நிப்பான் பெயிண்ட் குழுமம் வாழ்த்து தெரிவித்து உள்ளது.

9 views

இணையத்தில் கலக்கும் 70 வயது பெண் - பேரனுடன் லூட்டி அடிக்கும் ஜாலி பாட்டி

இணையத்தில் இளைஞர்களுக்கு இணையாக கலக்கி கொண்டிருக்கும் டிக்டாக் பாட்டியை பற்றி மகளிர் தின சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்...

77 views

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் - வலிகள் நிறைந்த கொண்டாட்டம்

மார்ச் 8 ஆன இன்று சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படும் நிலையில், மகளிர் தினம் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

18 views

அப்பவே அப்படி... தமிழகத்தில் நடைபெற்ற பலகட்ட தேர்தல்கள்

தமிழகத்திலும் பல கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன.

62 views

தபால் வாக்கு அளிக்க விரும்புபவர்கள் 12D விண்ணப்பம் அளிக்க வேண்டும்

தபால் வாக்கு அளிக்க விரும்பும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் அதற்குரிய 12 டி என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.