"சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்" - மருத்துவர்கள் அறிக்கை வெளியீடு
பதிவு : ஜனவரி 23, 2021, 11:17 AM
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஜனவரி 27ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகிறார் என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டது.நிமோனியா காய்ச்சல், தீவிர நுரையீரல் தொற்று இருப்பதால் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் ஜெயந்தி மற்றும் விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ் கிருஷ்ணா ஆகியோர் இன்று கூட்டாக மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளனர். சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா அறிகுறி குறைந்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளனர். நாடி துடிப்பு விகிதம் நிமிடத்திற்கு 68 ஆகவும், ரத்த அழுத்தம் 110/58 எம்.எம். ஹெச்.ஜி ஆகவும் இயல்பு நிலையில் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் கொரோனா மருத்துவ விதிமுறைபடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுட்டுள்ளது. ஐசியூவில் இருந்தாலும் தொடர்ந்து அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

"சசிகலாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்" - ரமேஷ் கிருஷ்ணா, விக்டோரியா மருத்துவமனை
சசிகலாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்தாக, விக்டோரியா மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

451 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

82 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

75 views

பிற செய்திகள்

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

103 views

அ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.

257 views

மா.கம்யூ., கட்சிக்கு 7 தொகுதிகள்? 10 தொகுதிகள் கேட்கும் மா.கம்யூ., கட்சி

திமுகவுடன் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

68 views

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை

வரும்10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

24 views

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல்

அதிமுக ஆட்சிமன்றக் குழுகூட்டம் முடிந்ததும் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 views

யானையை பாகன்கள் துன்புறுத்திய விவகாரம் - கோயில் திரும்பிய யானை ஜெயமால்யதா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இருந்து மீண்டும் கோயிலுக்கு திரும்பியது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.