சிறுமி கண் முன்னால் தாய் அடித்துக் கொலை- மனம் பதற வைக்கும் மழலையின் வாக்குமூலம்
பதிவு : ஜனவரி 22, 2021, 07:11 PM
சென்னையை அடுத்த ஆவடியில், எழு வயது சிறுமியின் கண்முன்னே அவரின் தாய் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். அந்த அதிர்ச்சியை அப்படியே பதிவு செய்யும் செய்தி தொகுப்பு இது...
ஆவடியை அடுத்த மேல்பாக்கத்தில் உள்ள பஜனை கோவில் தெரு... பார்க்க மிக சாதாரணமாக இருக்கும் ஒரு வீட்டு வாசலில் போலீஸ் குவிந்திருந்தது... வீட்டுக்குள் இருந்து வந்த அலறல் சத்தம் ஊரையே கூட்டியது.அந்த வீட்டில் ஏதோ விபரீதம் நிகழ்ந்திருப்பதை அறிந்த காவல் துறையினர், ஒப்பாரி ஓலங்களை எல்லாம் கடந்து உள்ளே சென்று பார்த்தார்கள். அங்கே... அந்த வீட்டின் குடும்பத்தலைவி சரிதா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு வரை தனியார் நிறுவனம் ஒன்றில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தவர் தான் இந்த சரிதா. சுமார் 8 வருடங்களுக்கு முன்பே இவருக்கு திருமணமாகிவிட்டது. கணவரோடும் 7 வயது மகளோடும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த சரிதாவுக்கு எமனாக அமைந்துவிட்டது. மதன் என்பவரோடு ஏற்பட்ட பழக்கம்.42 வயதாகும் மதனோடு நட்பாகப் பழகிய சரிதாவுக்கு அவருடன் தகாத உறவு ஏற்பட்டிருக்கிறது. மதனுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகனும் மகளும் இருந்திருக்கிறார்கள். நானும் கணவரை பிரிந்து வருகிறேன்... நீயும் குடும்பத்தைப் பிரிந்து வந்தால் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் மதனும்  சரிதாவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருக்கிறார்கள். மதன் மூலமாக சரிதாவுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. அதன் பிறகுதான் மதன் இன்னும் தன் முதல் மனைவியை விட்டு முழுமையாகப் பிரியவில்லை என்பது தெரிந்திருக்கிறது சரிதாவுக்கு. முதல் மனைவிடமும் அவரின் குழந்தைகளிடமும் மதன் போனில் பேசுவதை கண்டுபிடித்து சண்டையிட்டிருக்கிறார் சரிதா. தினந்தோறும் தொடர்ந்து வந்த இந்த சண்டைதான் அந்த கோரமான இரவிலும் நடந்திருக்கிறது. அப்போது சரிதா, கோபத்தில் மதனை ஆபாசமாகத் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதன் இரும்பு பைப் ஒன்றை எடுத்து சரிதாவை தலையில் படுபயங்கரமாகத் தாக்கியிருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே சரிதா துடிதுடித்து பலியாகிவிட்டார். தாய் இப்படி கொல்லப்படுவதை சரிதாவின் முதல் மகள் நேரில் பார்த்திருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
கொலை செய்த கையோடு மதன் தனது 7 மாத குழந்தையை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். ஆனால், ஆவடி போலீசார் அவரை 3 மணிநேரத்தில் வளைத்துப் பிடித்து கைது செய்திருக்கிறார்கள். சட்டம் இவருக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் தரலாம்... ஆனால், சரிதாவின் ரத்த உறவுகள் கொடுக்கும் சாபமே இவருக்கான முதல் தண்டனை

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

399 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

208 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

55 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

47 views

பிற செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-ஆக உயர்த்தி உத்தரவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

84 views

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

103 views

"9 முதல் 11-ம் வகுப்பு வரை தேர்ச்சி" முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

134 views

பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் "கண்டா வர சொல்லுங்க" - யார் இந்த "தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்"

கிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன்.

349 views

ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயில் - பொங்கல் வைத்து வழிபட்ட தொண்டர்கள்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, மதுரையில் ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயிலில் தொண்டர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

53 views

மயூரநாதசுவாமி கோயில் யானை அபயாம்பிகை... துள்ளித்திரியும் அபயாம்பிகையின் வயது 56

மயிலாடுதுறை மக்களின் நேசத்தை பெற்ற அபயாம்பிகை யானை, இப்போது தேக்கம்பட்டி முகாமில் துறுதுறுப்பாக சுற்றி வருவதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.