"ராணுவ ரகசியங்கள் கசிந்த புகார் : மத்திய அரசு மவுனம் சாதிப்பது ஏன்?" செயற் குழு கூட்டத்தில் சோனியா கேள்வி
பதிவு : ஜனவரி 22, 2021, 04:05 PM
ராணுவ ரகசியங்கள் கசிந்த புகாரில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது ஏன்.. ? என, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அப்போது, பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்க இருக்கும் நிலையில் அவையில் முன் வைக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய சோனியா காந்தி விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அரசு அது குறித்து உணர்வின்றி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் பேச்சு வார்த்தை என்கிற பெயரில் அரசு பிடிவாத போக்குடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்கள் அவசர கதியில் இயற்றப்பட்டதை காங்கிரஸ் கட்சி, ஆரம்பம் முதலே எதிர்த்து வருவதாக, சோனியா காந்தி கூறியுள்ளார். 3 வேளாண் சட்டங்களும் உணவு பாதுகாப்பின் அடிப்படை சாராம்சத்தை சிதைக்கும் என்பதால் அவற்றை நிராகரிப்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக இருப்பதாக சோனியா காந்தி குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்த சோனியாகாந்தி தனியார் மயமாக்குவதை இறுகப் பற்றி இருக்கும் அரசின் முடிவை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் ஏற்கவோ ஆதரிக்கவோ செய்யாது என தெரிவித்தார். ராணுவ ரகசியங்கள் கசிந்த புகாரில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது ஏன் என்றும், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

410 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

255 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

70 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

62 views

பிற செய்திகள்

டெம்போவில் கணவனை கட்டி தரதரவென இழுத்துச் சென்ற மனைவி... பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

கணவனை, தமது தம்பியின் உதவியுடன், மனைவியே டெம்போ வாகனத்தின் பின்புறம் கயிற்றில் கட்டி இழுத்துச் சென்ற காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

26 views

காய்கறி லாரிகளில் பறக்கும் படையினர் ஆய்வு - கணக்கில் வராத ரூ.19.20 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

9 views

அரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கிய ரோபோ - பஞ்சாப் மொழியை பேசும் உலகின் முதல் ரோபோ

பஞ்சாப்பில் அரசு பள்ளி ஆசிரியர் பஞ்சாபி மொழியை பேசும் உலகில் முதல் ரோபோவை உருவாக்கியுள்ளார்.

10 views

பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - 19 செயற்கைகோள்களை சுமந்து சென்றது

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

25 views

காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் - கபில் சிபல் கருத்து

காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

31 views

புதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு

சட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.