காவலர்களிடம் கைவரிசை காட்டும் தலைமை காவலர் - ஆடியோவால் சிக்கலில் சிக்கிய தலைமை காவலர்
பதிவு : ஜனவரி 22, 2021, 01:27 PM
தொழிலதிபரை மிரட்டி பொய் வழக்கு, சக காவலர்களையே மிரட்டி பணம் பறிப்பு என சிக்கலில் சிக்கி இருக்கும் 2 போலீசாரை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
தொழிலதிபரை மிரட்டி பொய் வழக்கு, சக காவலர்களையே மிரட்டி பணம் பறிப்பு என சிக்கலில் சிக்கி இருக்கும் 2 போலீசாரை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  தலைமை காவலராக  பணியாற்றி வந்தவர்  தமிழரசன்... சின்ன சின்ன புகார்களில் சிக்கி உயர் அதிகாரிகளிடம் விசாரணைக்கு வரும் சக காவலர்களை கண்டறிந்து அவர்களிடம் தேடிப்போய் பேசுவது தமிழரசனின் வழக்கம்.அப்படி பேச்சு கொடுக்கும் சக காவலர்களை தன் பாணியில் மிரட்டி தனக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக் கொள்வதும் உண்டு. பணம், நகைகள், விலை உயர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பரிசு பொருட்கள் என கிடைத்ததை எல்லாம் வாங்கிக் கொள்வதாக இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே புகார்கள் எழுந்தன.இதனை விசாரித்த உயர் அதிகாரிகள், தமிழரசனை திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டனர். ஆனால் அங்கு சென்றும் அவர் தன் வேலையை நிறுத்தியதாக தெரியவில்லை...அங்கே விசாரணைக்கு வந்த சக காவலர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்ட தமிழரசன், தனக்கு விலை உயர்ந்த செல்போனை வாங்கிக் கொடுத்தால் ஓகே. இல்லாவிட்டால் ஒழுங்கீன வழக்கில் சிக்க வைப்பேன் என மிரட்டியிருக்கிறார்... இந்த ஆடியோ இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...இந்த ஆடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழரசன் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இது ஒரு பக்கம் என்றால் தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த பெண் ஆய்வாளரின் கதை கேட்போரை கிறுகிறுக்க வைக்கிறது...கோவையை சேர்ந்தவர் தொழிலதிபரான ராஜசிம்ம நாயுடு. இவருக்கு தொழில் ரீதியாக அறிமுகமானவர் விஷ்ணுபிரியா என்ற பெண்.. ஆரம்பத்தில் நட்பாக பழகிய விஷ்ணுபிரியா, ராஜசிம்ம நாயுடுவின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக தெரிகிறது. இதனை அறிந்து கொண்ட தொழிலதிபர், விஷ்ணுபிரியாவை விட்டு விலக முயன்றுள்ளார். இதை அறிந்த அந்த பெண்ணோ, ராஜசிம்ம நாயுடுவின் லேப்டாப், செல்போன்களை திருடி உள்ளார்.அப்போது தான் உமாராணி என்ற பெண் இந்த கதைக்குள் வருகிறார். 2018ல் ராஜசிம்ம நாயுடுவுக்கு அறிமுகமான உமாராணி, அவரை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதை எல்லாம் அறிந்து கொண்ட விஷ்ணுபிரியா உமாராணியோடு கை கோர்த்துக் கொண்டு பணம் பறிக்கும் திட்டத்தை அரங்கேற்றி உள்ளார். உமாராணியை ஓட்டலில் வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அதை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். மேலும் தொழிலதிபர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அப்போது அவரை கைது செய்யாமல் இருக்க மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் ஞான செல்வத்துடன் சேர்ந்து கொண்டு 28 லட்ச ரூபாய் பணம் பறித்திருக்கிறது இந்த 3 பெண்கள் கும்பல்...உமாராணியை ஓட்டலில் வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அதை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். மேலும் தொழிலதிபர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அப்போது அவரை கைது செய்யாமல் இருக்க மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் ஞான செல்வத்துடன் சேர்ந்து கொண்டு 28 லட்ச ரூபாய் பணம் பறித்திருக்கிறது இந்த 3 பெண்கள் கும்பல்...தன்னிடம் இருந்து மிரட்டி பறித்த பணத்தில் பெண் காவல் ஆய்வாளர் விமான டிக்கெட் எடுத்து சுற்றுலா சென்றதாகவும் ஆதாரத்தை வெளியிட்டு அதிர வைத்துள்ளார். இப்போது நீதிமன்ற உத்தரவின் படி பெண் காவல் ஆய்வாளர் மற்றும் மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

454 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

86 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

77 views

பிற செய்திகள்

"அதிமுகவில் கூட்டணியில் இணைய விருப்பம்" - இந்து மக்கள் கட்சித் தலைவர் பேட்டி

சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க, கடிதம் அளித்து உள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறி உள்ளார்.

33 views

காங். இல்லாமல் புதுவையில் வெற்றி சாத்தியமா? நேர்காணலில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி?

காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் புதுச்சேரியில் வெற்றி பெற முடியுமா என்று நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

253 views

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

136 views

அ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.

316 views

மா.கம்யூ., கட்சிக்கு 7 தொகுதிகள்? 10 தொகுதிகள் கேட்கும் மா.கம்யூ., கட்சி

திமுகவுடன் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

80 views

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை

வரும்10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.