கண்களுக்கு விருந்தளித்த பனிசறுக்கு பந்தயம் - வெற்றிக்காக சீறிப் பாய்ந்த நாய்கள்
பதிவு : ஜனவரி 22, 2021, 12:38 PM
பிரான்சில் ஆல்ப்ஸ் மலை சிகரத்தில் நடைபெற்ற நாய்கள் பனிசறுக்கு பந்தயம் கண்களுக்கு விருந்தளித்தது. இதுபற்றி பார்க்கலாம்...
விண்ணை முட்டி நிற்கும் ஆல்ப்ஸ் மலை தொடரில் அரங்கேறிய அழகிய பந்தயம் தான் இது. ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இந்த பந்தயம் நாய்களை முன்னிறுத்தி நடைபெறுவதுதான் இந்த பந்தயத்தின் சிறப்பம்சம்.ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த பந்தயத்தின், 17வது சீசன் கடந்த ஜனவரி 9ஆம் தேதி தொடங்கப்பட்டது. 55 வீரர், வீராங்கனைகளை வைத்து தொடங்கிய இந்த பந்தயத்தில் ஒட்டுமொத்தமாக 500 நாய்கள் பங்கேற்றன.இதில் ஏற்கனவே 9 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இறுதி சுற்று பந்தயம், ஆல்ப்ஸ் சிகரத்தில் உள்ள VAL-CENIS பகுதியில் உற்சாகமாக நடைபெற்றது. எப்போதும் ரசிகர்கள் புடைசூழ நடைபெறும் இந்த பந்தயம், கொரோனா அச்சுறுத்தலால், ரசிகர்களின்றி நடத்தப்பட்டது.பந்தயம் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு அணி வீரரும் இலக்கை நோக்கி நாய்களை சீறிப் பாய வைத்தனர். வீரர்கள் வெற்றிக்காக முனைப்பு காட்ட, பனிச்சரிவில் நாய்கள் சீறி ஓடிய காட்சிகள் பிரமிக்க வைத்தன. ஒருபக்கம் பந்தயம் விறுவிறுப்போடு செல்ல, மறுபக்கம் பந்தய வழிகள் இடமெல்லாம் கண்களுக்கு விருந்தளித்தன.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் பிரான்ஸை சேர்ந்த REMY COSTE என்பவருக்கு சொந்தமான அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வெல்ல, தன்னை ஜெயிக்க வைத்த நாய்களுடன் கொஞ்சி குலாவிய காட்சிகள் அழகானவை.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

421 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

73 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

'கர்ணன்' படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியீடு

நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

51 views

2 குழந்தைகளின் தாயான அன்ஜா காலென்பாச் சிறந்த அழகியாக தேர்வு

ஜெர்மனியில், நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான, அன்ஜா காலென்பாச் எனும் பெண்மணி மிஸ்.ஜெர்மனியாக, தேர்வு செய்யப்பட்டார்.

61 views

கைதி தப்பிப்பது போன்ற தத்ரூப சித்திரம்

இங்கிலாந்தின் ரீடிங் நகரில் உள்ள சிறைச் சுவரில், கைதி தப்பிப்பது போன்ற தத்ரூப சித்திரம் தீட்டப்பட்டு உள்ளது.

171 views

78 வது கோல்டன் குளோப் விருது விழா - காணொலி மூலம், கலைஞர்கள் பங்கேற்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவில், காணொலி மூலம் 78 வது, கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

9 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

26 views

புதிய கட்சி தொடங்கப் போவதில்லை - டொனால்ட் டிரம்ப்

தான் புதிய கட்சி தொடங்கப் போவதில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.