மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
பதிவு : ஜனவரி 21, 2021, 07:55 PM
இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக மீனவர்கள் 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 18ந் தேதி மீன் பிடிக்க விசைப்படகில் கடலுக்கு சென்ற மெசியா, நாகராஜ், செந்தில்குமார் மற்றும் சாம்சன்டார்வின் ஆகியோர் இலங்கை கடற்படை தாக்குதலால் இறந்துவிட்டதாக மீனவர்கள் மூலம் தகவல் வரப்பெற்றதாக தெரிவித்துள்ளார்.அந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அரசின் விதிகளுக்குட்பட்டு தகுதியின் அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தாக்குதலில் பாதிப்படைந்த விசைப்படகிற்கு அரசு விதிகளுக்கு உட்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலை  வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தாக்குதல் சம்பவம் குறித்து இந்திய தூதரகம் மூலமாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

453 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

82 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

75 views

பிற செய்திகள்

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

106 views

அ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.

258 views

மா.கம்யூ., கட்சிக்கு 7 தொகுதிகள்? 10 தொகுதிகள் கேட்கும் மா.கம்யூ., கட்சி

திமுகவுடன் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

68 views

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை

வரும்10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

24 views

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல்

அதிமுக ஆட்சிமன்றக் குழுகூட்டம் முடிந்ததும் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 views

யானையை பாகன்கள் துன்புறுத்திய விவகாரம் - கோயில் திரும்பிய யானை ஜெயமால்யதா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இருந்து மீண்டும் கோயிலுக்கு திரும்பியது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.