காதல் என்ற பெயரில் இளைஞர் கொடுத்த தொல்லை - தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
பதிவு : ஜனவரி 20, 2021, 01:48 PM
காதல் என்ற பெயரில் இளைஞர் கொடுத்த தொல்லையால், உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்ட, இளம்பெண்ணின் பரிதாப நிலை பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.....
காதல் தொல்லை... புகைப்படங்களை தவறாக சித்தரித்து மார்பிங்... அண்ணனிடம் கொலை மிரட்டல்... இதற்கெல்லாம் உச்சமாக வீடு தேடி வந்து கத்தியுடன் கொலை மிரட்டல் என ஒரு இளைஞரின் தொடர் சித்தரவதையால், உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் திருவண்ணாமலையை சேர்ந்த இளம்பெண்...திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த பெண்ணிடம் கேட்ட போது, காதல் என்ற போர்வையில் அந்த குடும்பம் அனுபவித்த வேதனைகள் வெளிச்சத்துக்கு வந்தன...ஆரணியை அடுத்த மேட்டுக்குடியை சேர்ந்த அவர், தெள்ளூர் என்ற பக்கத்து கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றபோது, துப்பட்டா சைக்கிளில் சிக்கியதாகவும், அதை கோதண்டராமன் எடுத்து கொடுத்ததால் நன்றி கூறியதாகவும் தெரிவித்தார்.அந்த நன்றி என்ற வார்த்தை தான், அந்த பெண்ணின் வாழ்க்கையில் புயல் வீசத் துவங்கி உள்ளது.நன்றியெல்லாம் வேண்டாம் உங்கள் ஊரில் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அதற்கு உதவ வேண்டும் என கோதண்டராமன் கூற.... நாளடைவில்தான் அந்த பெண்ணுக்கு தெரிந்திருக்கிறது, கோதண்டராமன் காதலிப்பதாக கூறியது தன்னைத்தான் என்பது...இதையடுத்து, பெண்கேட்டு அவர் வந்தபோது, மறுத்ததால், மலேசியாவுக்கு சென்ற கோதண்டராமன், திரும்ப வந்தபோது, பல பெண்களுடன் தொடர்பு, போதைப்பழக்கம் என ஆளே மாறியிருந்ததால், அவருடனான பழக்கத்தையும் அந்த பெண் கைவிட்டிருக்கிறார்.அப்போது தான், தனது சுய ரூபத்தை காட்டத் தொடங்கினார் கோதண்டராமன்... முதலில் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக இணையதளங்களில் ஏற்றி இருக்கிறார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க, போலீசாரும் எச்சரித்து அனுப்பி உள்ளனர். அதன்பிறகு, நர்ஸ் வேலை கிடைத்ததால், அந்த பெண்ணும் சென்னைக்கு சென்று விட, தற்போது  பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.அதை அறிந்து கொண்ட கோதண்டராமன், அந்த பெண்ணின் அண்ணனை மிரட்டியதோடு, யாருக்கு திருமணம் செய்து கொடுத்தாலும், அவரை கொன்று தாலியை அறுத்து எறிந்துவிட்டு உன் தங்கையை கூட்டி செல்வேன் என எச்சரித்திருக்கிறார்.(பெண்ணின் அண்ணனை மிரட்டும் ஆடியோ)இந்த நிலையில் மேலும் ஒரு அவமானத்தை அரங்கேற்றினார் கோதண்டராமன்... அந்த அவமானம் தான், இளம் பெண்ணை உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு தள்ளி இருக்கிறது.கத்தியுடன் வீடு தேடி வந்து கொல்ல முயற்சித்து, கோதண்டராமன் செய்த ரகளையால் தெருவே சேர்ந்து பஞ்சாயத்து பேசும் அளவிற்கு சென்றிருக்கிறது. இதையடுத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், அந்த பெண்.இணைய தளத்தில் படங்களை பதிவேற்றியபோதே போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், இத்தனை துணிச்சலாக வீடு தேடி வந்து கத்தியுடன் மிரட்டியிருப்பாரா என கேள்வி எழுப்பிய அந்த பெண்... இனியாவது விடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்... 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

468 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

237 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

89 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

87 views

பிற செய்திகள்

சிங்கப்பூர் விமானத்தில் தங்கம் கடத்தல்... ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

19 views

மாற்றங்களை கொண்டு வரும் பெண்களுக்கு வணக்கம் - நிப்பான் பெயிண்ட் குழுமம் அறிக்கை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நிப்பான் பெயிண்ட் குழுமம் வாழ்த்து தெரிவித்து உள்ளது.

9 views

இணையத்தில் கலக்கும் 70 வயது பெண் - பேரனுடன் லூட்டி அடிக்கும் ஜாலி பாட்டி

இணையத்தில் இளைஞர்களுக்கு இணையாக கலக்கி கொண்டிருக்கும் டிக்டாக் பாட்டியை பற்றி மகளிர் தின சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்...

77 views

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் - வலிகள் நிறைந்த கொண்டாட்டம்

மார்ச் 8 ஆன இன்று சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படும் நிலையில், மகளிர் தினம் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

18 views

அப்பவே அப்படி... தமிழகத்தில் நடைபெற்ற பலகட்ட தேர்தல்கள்

தமிழகத்திலும் பல கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன.

62 views

தபால் வாக்கு அளிக்க விரும்புபவர்கள் 12D விண்ணப்பம் அளிக்க வேண்டும்

தபால் வாக்கு அளிக்க விரும்பும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் அதற்குரிய 12 டி என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.