ஆபாச பேட்டியால் கைதான 3 பேர் - பார்வையாளர்களை கவர அத்துமீறலா?
பதிவு : ஜனவரி 14, 2021, 08:40 PM
ஆபாச பேட்டி சர்ச்சையால் யூட்யூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைதான நிலையில் பார்வையாளர்களை அதிகம் கவர யூட்யூப் சேனல்கள் அத்துமீறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்க ஒரு ஸ்மார்ட் போன் போதும்... நானும் ஒரு பெரிய செலிபிரிட்டி தான் என்பதை நிரூபிக்க யூட்யூப் சேனலை நடத்தி வருவோரும் பேட்டி எடுப்போரும் புற்றீசல்போல முளைத்து வருவதே அதற்கு சாட்சி... 
ஆனால் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் தான் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 
தரம் தாழ்ந்த ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த பேச்சுகளை வெளியிட்டால் பார்வையாளர்களை கவரலாம் என நினைத்து, அதை திட்டமிட்டு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்... அப்படி ஒரு சம்பவத்தில் சென்னையின் யூட்யூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைதாகினர். ஆபாசமான கேள்விகளை முன்வைத்து அதற்கு பதில் கொடுக்கும் பெண்ணின் பேட்டி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதே இந்த கைதுக்கு பின்னணி. 
கைதான 3 பேரிடம் விசாரணை செய்ததில் இதுபோன்ற ஆபாச வார்த்தைகளை கொண்ட 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு 7 கோடி பேர் அதை பார்த்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 
யூ ட்யூப் சேனல்களை நடத்துவோர் மட்டுமின்றி அதில் பங்கேற்பாளராக இருப்போருக்கும் கடமைகள் இருக்கிறது என்கிறார் வழக்கறிஞர் பாலு. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தனியாக காவல்துறையில் ஒரு பிரிவை உருவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார் அவர்....

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

212 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

124 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

106 views

பிற செய்திகள்

உற்பத்தி முதல் விற்பனை வரை - பொங்கல் கரும்பின் கதை

தித்திக்கும் பொங்கலை போல செங்கரும்பின் சுவையும் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கூடுதல் சுவையாக்கும்.. கரும்பு உற்பத்தி தொடங்கி அதன் விற்பனை வரை என்ன நடக்கிறது?

17 views

"இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்" - ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள்

படித்தவர்களும், இளைஞர்களும் இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டுசெல்ல பொங்கல் திருநாளில் உறுதி ஏற்க வேண்டும் என, ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

20 views

"பொங்கல் செழிப்பைக் கொண்டு வரட்டும்" - தமிழக ஆளுநர் பொங்கல் வாழ்த்து

தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவிப்பதாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.

19 views

"தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டம்; முதலமைச்சர் வரலாற்றில் இடம் பெறுவார்" - அமைச்சர் இராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

31 views

வெள்ளத்தில் குதித்து விளையாடும் இளைஞர்கள் - சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குதித்து விளையாடும் இளைஞர்களின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

68 views

சென்னை மாநகரில் போகி கொண்டாட்டம் - பனிமூட்டத்துடன் சேர்ந்து கொண்ட புகை மூட்டம்

சென்னையில் பொதுமக்களின் போகி கொண்டாட்டத்தால் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.