பரோட்டா உண்ணும் போட்டி - பொங்கலை முன்னிட்டு விநோத போட்டி
பதிவு : ஜனவரி 12, 2021, 07:36 PM
பொங்கலை முன்னிட்டு பரோட்டா உண்ணும் விநோத போட்டி ஆத்தூரில் நடந்துள்ளது.
'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தில்  ஹோட்டல் கடைக்காரர் நடத்திய பரோட்டா உண்ணும் போட்டியில், நடிகர் சூரி கலந்து கொள்ளும்  காட்சி இடம்பெற்றிருக்கும். திரைப்படத்தில் வரும் இதே காட்சியைப்போல் ஒரு உண்மை சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில், ஆட்டோ செல்வம் என்பவர், புதிய ஹோட்டல் ஒன்றை திறந்துள்ளார். தமது ஹோட்டலை பிரபல படுத்தும் வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டியை அறிவித்தார்.  இந்த போட்டி குறித்து துண்டு பிரசுரங்கள் அச்சடித்து அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்தார்.பரோட்டா உண்ணும்  போட்டி மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவித்தார்.இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.போட்டி விதிமுறைப்படி பத்து நிமிடத்திற்குள் 15 பரோட்டாவை யாராலும் சாப்பிட முடியவில்லை 14 பரோட்டா சாப்பிட்ட ஏத்தாப்பூர் அபிநவம் இளங்கோ முதல் பரிசு பெற்றார்.  சேலம் ஸ்ரீதர் இரண்டாம் பரிசும், ஏத்தாப்பூர் காமராஜ் மூன்றாம் பரிசும், அபிநவம் செல்வம் நான்காம் பரிசு பெற்றனர்.போட்டியில்  தோல்வியுற்றவர்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கு பணம் செலுத்தி சென்றனர். திரைப்படக் காட்சியை போல் போட்டி நடந்ததால்,  வேடிக்கை பார்க்கவே, ஏராளமானோர் குவிந்திருந்தனர். 


தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

220 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

129 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

112 views

பிற செய்திகள்

ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு - இந்திய விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரியம் ஒரு குழுவை அமைத்துள்ளது.

28 views

"தமிழிலும் தேர்வு எழுதலாம்" - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

தமிழிலும் அஞ்சல்துறை தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு, பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

13 views

பென்னிகுவிக்கின் பிறந்த நாள் இன்று "நன்றியுடன் வணங்குகிறேன்"- ஸ்டாலின்

முல்லை பெரியாறு அணையினை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக்கின் பிறந்த நாளான இன்று அவரை தாம் நன்றியுடன் வணங்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12 views

முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் பிறந்த நாள் விழா - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பங்கேற்பு

முல்லைப்பெரியாறு அணையை கட்டி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னிகுக்கின் பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் ஜனவரி 15 ந்தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது

32 views

"அஞ்சல் தேர்வு தமிழிலும் எழுதலாம்" - வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய அரசு பதில்

அடுத்தமாதம் 14ஆம் தேதி நடைபெறும் அஞ்சல் தேர்வை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

20 views

2 நாளில் மது விற்பனை ரூ.417.18 கோடி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் 417 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.