"தலையில் விக் வைத்து ஏமாற்றி விட்டார்" - கணவர் மீது புகார் அளித்த மனைவி
பதிவு : ஜனவரி 12, 2021, 04:58 PM
தலையில் விக் வைத்து ஏமாற்றி தன்னை திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...
தலை போற பிரச்சினை என கேள்விப்பட்டிருப்போம்... இங்கே ஒருவருக்கு தலையே பிரச்சினையாகி இருக்கிறது... சென்னை ஆலப்பாக்கம்  பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். 29 வயதான இவருக்கு கடந்த 2015ல் இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்திருக்கிறது. இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தின் போது வரதட்சணையாக 50 சவரன் நகைகள் மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கப்பணமும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
திருமணம் ஆன ராஜசேகர், தன் மனைவியுடன் ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்ந்து வரவே, அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை கணவருக்கு தன்னை பிடிக்கவில்லையோ என நினைத்து மனதுக்குள் கலங்கியுள்ளார், மனைவி.5 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒருநாள் மனைவியுடன் ராஜசேகர் நெருங்கிய போது அதுவே அவருக்கு நிம்மதியை குலைக்கும் நாளாக மாறிப்போனது.. திடீரென அவரின் தலையில் இருந்த விக் கழன்று கீழே விழுந்ததில் அதிர்ச்சியடைந்தார் அந்த இளம்பெண். இத்தனை நாள் விக் வைத்த தலையோடு தன் கணவர் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார் அவர். இவர்களின் திருமணம் மேட்ரிமோனியல் தளத்தை பார்த்து உறுதியானது. ஆனால் அதில் ராஜசேகர் பதிவு செய்த போட்டோவில், கரு கரு முடியோடு இருந்ததை பார்த்து நம்பியே திருமணத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளார் அந்த  பெண். ஆனால் வழுக்கை தலையுடன் இருந்தவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததை பொறுக்கவே முடியவில்லை அவருக்கு. மேலும் வரதட்சணையாக கொடுத்த நகைகளை ராஜசேகர் செலவு செய்து விட்டு வங்கியில் நகைகள் இருப்பதாகவும் கூறி வந்ததை அறிந்த அந்த பெண், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ராஜசேகர் மீது நம்பிக்கை மோசடி, மற்றும் அவரது பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல் நிலையம் ஒன்று இதுவரை பார்த்திராத ஒரு வழக்கையும் இப்போது விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது... தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

225 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

137 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

116 views

பிற செய்திகள்

'மார்கழி' மழை நிவாரணம் - ஸ்டாலின் வலியுறுத்தல்

ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

16 views

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" - குருமூர்த்திக்கு தினகரன் பதிலடி

சசிகலா குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்...

98 views

குருமூர்த்தி பேச்சு - தி.மு.க. கண்டனம்

நீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, குறித்து தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது .

182 views

துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

21 views

"கோவேக்ஸின் பயன்படுத்தக் கூடாது" - அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

161 views

ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு - இந்திய விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரியம் ஒரு குழுவை அமைத்துள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.