சீன ஆன்லைன் கந்துவட்டி செயலி மோசடி - இரண்டு சீனர்கள் கைது
பதிவு : ஜனவரி 10, 2021, 04:59 PM
சீன ஆன்லைன் கந்துவட்டி செயலி விவகாரத்தில் காவலில் எடுத்து விசாரிக்கப்படும் சீனர்களின் விவரம் கேட்டு டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு சென்னை காவல் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
சீன ஆன்லைன் கந்துவட்டி செயலியின் மூலம் கடன் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட இரண்டு சீனர்கள் மற்றும் இரண்டு நிறுவன இயக்குனர்கள் ஆகியோரை பெங்களூரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதற்கு உதவிய  தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டுகள் வாங்கிக் கொடுத்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேரையும் காவல்துறை கைது செய்தது.மேலும் அமலாக்கத் துறையினரும் இது குறித்து விசாரணையை துவங்கியுள்ளனர். விசாரணையில் இரண்டு சீனர்களின் விசா காலாவதியாகியிருப்பது தெரிய வந்தது. மேலும் சீனர்களின் வங்கிக்கணக்கு, கந்து வட்டி செயலிக்கு பண முதலீடு எங்கிருந்து வந்தது, மற்றும் இது போன்று வேறு ஏதேனும் செயலிகள் அல்லது நிறுவனங்கள் நடத்தி வருகிறார்களா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் விவரம் குறித்து டெல்லியில் உள்ள சீன தூதரகத்தில் தகவல் கேட்டு சென்னை போலிசார் கடிதம் எழுதியுள்ளனர்.இந்திய சீன நாட்டின் தற்போதைய உறவு நிலையை பொறுத்த வரையில் பிடிபட்ட சீனர்கள் குறித்த முழுத்தகவல் சீன நாட்டிலிருந்து கிடைப்பது சவாலான நிலையில் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

11 views

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

33 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

33 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

81 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

43 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

118 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.