மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் யானைகள் - வனத்துறையினர் அடிக்கடி கண்காணிக்க கோரிக்கை
பதிவு : ஜனவரி 10, 2021, 02:09 PM
தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் மின்வேலியில் மின்சாரம் தாக்கி 5 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்...
 ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் அன்பு மொழியில் லயித்து...  சமூக வலைதளங்களில் இதயங்களை பறக்கவிட்ட மனித இனம்... மறுபுறம் அவளுடைய சந்ததியின் அழிவைப்பார்த்து இதயமற்று நிற்கிறதோ என்ற ஐயமே எழுகிறது.தென்னிந்தியாவிற்கு விவசாய பாசன வசதியையும், குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் எண்ணற்ற உயிரினங்களுக்கு புகலிடமாக விளங்குகிறது.இந்த மலையை தாயாக கொண்டிருக்கும் யானைகள்.... எங்கு தண்ணீர் இருக்கிறதோ, பசுமையான இலை - தழைகள் இருக்கின்றனவோ அதை நோக்கி நகர்ந்துக்கொண்டே இருக்கும்...யானைகள் இவ்வாறு செல்லும்போது, தன் பாதையில் ஏதாவது குறுக்கிட்டால் அதை சுற்றிப்போய் மீண்டும் தனது பழைய பாதையை தொடர அதற்கு தெரியாது.மேலும் மனித குடியிருப்புகள் விரிவடைந்து, புதிய பகுதிகளுக்கு பரவி வருவதால், யானைகளின் வாழ்விடங்கள் குறைந்து அழிவுக்கு தள்ளப்படுகின்றன. இதனால் அவைகள் பாதைமாறி கீழே இறங்க தொடங்கிவிட்டன.நாளொன்றுக்கு  160 கிலோ எடை வரையிலான பசுமையான உணவும், அதிக அளவில் தண்ணீரும் தேவைப்படும் உயிரினத்திற்கு இது விவசாய நிலங்களில் எளிதாக கிடைப்பதால், அதனை நோக்கிய பயணத்தை வழக்கமாக்கி கொண்டன... இது அவைகளின் தவறா...? என்றால் இல்லை...நீலகிரி மாவட்டத்தில் யானைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைக்குச் செல்லும் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை எல்லாம் அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் சொன்ன வார்த்தை... யானை ஒரு ஜென்டில்மேன்; அதற்கு மனிதன் வழிவிட வேண்டும் என்பதாகும்..ஆம் உண்மையில் யானைகள் ஜென்டில்மேன் தான். யானைகள் புலிகளை போல் மனித கொல்லிகள் கிடையாது. அவைகளை ஆபத்தான முறையில் விரட்டும் போதுதான் எதிர்வினை சீற்றம் ஆரம்பித்து மனித - யானை மோதலாகிறது. பார்க்க.. பார்க்க.. அலுக்காத உயிரினம் தற்போது ஒவ்வொருநாளும் அவலத்தை எதிர்க்கொண்டு வருகிறது. யானைகள் உயிரிழப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது2019ஆம் மத்திய அரசு வெளியிட்ட தகவலில் 2015 முதல் 2018 வரையில் மனிதன் - யானைகள்  மோதலில் 373 யானைகள் உயிரிழந்து இருப்பதாகவும் இதில் 226 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுமலை அடிவாரப் பகுதிகளில் பயிர்களை காப்பதாக கூறி மின்வேலி அமைக்கும் விவசாயிகள்...  உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ச்சுவதால் தொட்டதும் என்ன நடந்ததென்று உணர்வதற்குள் சுருண்டு விழுந்து மடிகின்றன, இந்த அப்பாவி உயிரினங்கள்... இதில் வேதனையான சம்பவம் தமிழகத்தில் இதுபோன்ற யானைகள் உயிரிழப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதுதான்...
கடந்த 3 மாதங்களில் மட்டும் இப்படி மின்வேலியில் சிக்கி 5 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

14 views

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

34 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

33 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

82 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

43 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

118 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.