கல்லூரி மாணவர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படும் - தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
பதிவு : ஜனவரி 10, 2021, 02:04 PM
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையால் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 32 சதவீதத்திலிருந்து 49 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது எனக் கூறியுள்ளார்.ஏற்கனவே மாணவர்களுக்கு கணினி வழங்கும் அரசு, கொரோனா தொற்று காலத்தில் அவர்கள் இணைய கல்வியை தொடர 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது என அறிவித்து உள்ளார்.ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் என்றும் எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க உத்தரவிட்டு உள்ளேன் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.  டேட்டா கார்டை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டுமென்று மாணவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரிப்புமாணவர்கள் இணைய கல்வியை தொட தினசரி 2 ஜிபி இலவச டேட்டா ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் நான்கு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது9,69,047 கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என அறிவிப்புமாணவர்கள் டேட்டா கார்டை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் - முதல்வர் .

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

36 views

9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு - 50% வரை பாடத்திட்டங்கள் குறைப்பு

ஒன்பதாம் வகுப்பிற்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

36 views

சைக்கிள் மீது கார் கொடூர மோதல் - சி.சி.டி.வி. வெளியீடு

திருவாரூரில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

332 views

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது"மருத்துவமனை புதிய தகவல்

சசிகலா உடல்நிலை குறித்து கர்நாடகா அரசு மருத்துவமனை புதிய தகவல் வெளியிட்டுள்ளது.

56 views

குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம் - சென்ட்ரலில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

32 views

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.