"16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி"-மத்திய அரசு அறிவிப்பு
பதிவு : ஜனவரி 09, 2021, 07:10 PM
நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றுமத்திய அரசு அறிவித்துள்ளது.
பாரத் பயோ-டெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசர காலங்களுக்கு பயன்படுத்த கடந்த 3 ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.தொடர்ந்து, நாடு முழுவதும் 33 மாநிலங்களில் தடுப்பூசி போடுவது குறித்து ஒத்திகை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தடுப்பூசிகள் போடுவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருப்பதையொட்டி,அதை பொதுமக்களுக்கு எப்படி வழங்குவது என்பது குறித்து, டெல்லியில்  பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து, வரும் 16-ம் தேதி நாடு முழுவதும்,கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார பணியாளர், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக 50 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

220 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

131 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

113 views

பிற செய்திகள்

ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு - இந்திய விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரியம் ஒரு குழுவை அமைத்துள்ளது.

31 views

"தமிழிலும் தேர்வு எழுதலாம்" - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

தமிழிலும் அஞ்சல்துறை தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு, பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

13 views

பென்னிகுவிக்கின் பிறந்த நாள் இன்று "நன்றியுடன் வணங்குகிறேன்"- ஸ்டாலின்

முல்லை பெரியாறு அணையினை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக்கின் பிறந்த நாளான இன்று அவரை தாம் நன்றியுடன் வணங்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12 views

முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் பிறந்த நாள் விழா - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பங்கேற்பு

முல்லைப்பெரியாறு அணையை கட்டி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னிகுக்கின் பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் ஜனவரி 15 ந்தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது

33 views

"அஞ்சல் தேர்வு தமிழிலும் எழுதலாம்" - வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய அரசு பதில்

அடுத்தமாதம் 14ஆம் தேதி நடைபெறும் அஞ்சல் தேர்வை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

21 views

2 நாளில் மது விற்பனை ரூ.417.18 கோடி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் 417 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.