துப்பாக்கி உரிமம் பெறுவதற்காக போட்ட நாடகம் - கொலை முயற்சி என நாடகமாடிய திமுக பிரமுகர்
பதிவு : ஜனவரி 09, 2021, 07:05 PM
திருவள்ளூரில் துப்பாக்கி உரிமம் பெறுவதற்காக கொலை முயற்சி நாடகமாடிய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரை சேர்ந்தவர் கண்ணன். திமுக பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 27ஆம் தேதி பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமம் அருகே காரில் வந்து கொண்டிருந்த போது மர்ம கும்பல் ஒன்று திடீரென வழிமறித்து தன்னுடைய கார் கண்ணாடிகளை உடைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக அவர் பெரியம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திமுக பிரமுகர் என்பதால் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அவர் சொன்ன இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற கூலிப்படையை போலீசார் பிடித்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்திய போது, வழக்கறிஞர் ராஜா என்பவர் சொன்னதை கேட்டு இவ்வாறு செய்ததாக கூறியுள்ளனர். உடனடியாக வழக்கறிஞர் ராஜாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது, இது திட்டமிட்ட நாடகம் என தெரியவந்தது. துப்பாக்கி உரிமம் பெற விரும்பிய திமுக பிரமுகர் கண்ணன், அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜா என்பவரை அணுகியுள்ளார். அப்போது அவர் போட்டுக் கொடுத்த திட்டமிட்ட நாடகமே இது. கொலை முயற்சி போல சித்தரித்து அதை காட்டி பாதுகாப்புக்காக துப்பாக்கி கேட்டால் எளிதாக கிடைக்கும் என வழக்கறிஞர் யோசனை கூறவே, அதை அரங்கேற்றி இருக்கிறார் திமுக பிரமுகர். இந்த விவகாரத்தில் கூலிப்படையினர் 5 பேர் மற்றும் வழக்கறிஞர் ராஜா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பொய்யான சம்பவத்தை சித்தரித்து அரசு ஊழியர்களின் பணியை முறைகேடாக பயன்படுத்தியதாக திமுக பிரமுகர் கண்ணனும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

184 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

144 views

பிற செய்திகள்

ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்துமாறு மனு - அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லை

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல், பிப்ரவரி 15ஆம் தேதிக்கு முன் நடத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

9 views

பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யங்கள் - தங்கமாக ஜொலிக்கும் பறவை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான உத்வேகத்தை உயிர்பிக்க உவமையாக கூறப்படும் பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

90 views

மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது

தனது வசிகர பேச்சால், மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

28 views

வடமாநில கும்பலின் சீர்காழி படுகொலைகள்- தமிழகத்தில் மீண்டும் பவாரியா கும்பலா?

சீர்காழியில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளர் வீட்டின் கதவை தட்டிய வடமாநில கும்பல், கதவை திறந்த அடுத்த கணமே அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு கொள்ளை அடித்த‌து

603 views

நினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு - அதிமுகவினரின் கோயில் என கட்சியினர் உருக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு, நினைவில்லமாக திறந்து வைக்கப்பட்டது.

41 views

தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.