மொத்த குடும்பமே பிணமாக கண்டெடுப்பு - என்ன நட‌ந்த‌து வடமாநில தொழிலாளியின் குடும்பத்திற்கு?
பதிவு : ஜனவரி 08, 2021, 04:44 PM
சிறுமி மாயம்... வடமாநில இளைஞர் மீது சந்தேகம்... திடீரென வடமாநில இளைஞரின் ஒட்டுமொத்த குடும்பமே சடலமாக மீட்பு.... இப்படி அடுத்த‌டுத்த அதிர்ச்சி சம்பவங்களால், தமிழகத்தை அதிரவைத்துள்ளது பின் வரும் சம்பவம்...
அந்த 27 வயது இளைஞனின் பெயர் பகத் ஓரான்... ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்... வடமாநில தொழிலாளர்கள் நிறைந்த நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலகம்பை, தூதூர்மடம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். என்றுமே இல்லாத வகையில் அன்றைய தினம் பகத்தின் வீட்டில் அப்படி ஒரு நிசப்தம்... கதவை தட்டி தட்டி பார்த்து ஓய்ந்து போன அக்கம்பக்கத்தினரின் கைகள், ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து காவல்துறை எண்ணை தொடர்பு கொண்டது... விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது விபரீதம் வெளிச்சத்துக்கு வந்த‌து... 24 வயதேயான பகத்தின் மனைவி சுமதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்... அருகே உள்ள தொட்டியில் ரேஷ்மா என்ற 4 வயது மகள் சடலம் கிடைத்த‌து.... தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்தபோது, 8 வயது மகன் அபய், தலையில் அடித்துக்கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டான்... அருகே தூக்குக்கயிற்றில் சடலமாக கிடந்தார் அந்த வடமாநில இளைஞர் பகத்... இதற்கிடையே அந்த வீட்டில் கடிதம் ஒன்றும் சிக்கியது... அந்த கடித‌த்தில் 9 பேரின் பெயர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்த போலீசார், அவர்கள் தான் மரணத்திற்கு காரணம் என்றும் பகத் எழுதி வைத்துள்ளதாக கூறியுள்ளனர்...
யார் அந்த 9 பேர்... என்ன நடந்த‌து பகத்திற்கு... 
கைப்பற்றப்பட்ட கடித‌த்தின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியது காவல்துறை... கடித‌த்தில் இருந்த நபர்கள், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தானாம்... கடந்த 21 ஆம் தேதி ஜார்கண்ட் மாநில தொழிலாளி ஒருவரின் 8 வயது குழந்தை காணாமல் போயுள்ளது... இதில், பகத் மேல் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு குடும்பம், அவரை துருவி துருவி விசாரித்துள்ளது... 
ஒருகட்டத்தில், பகத்தின் மனைவி சுமதியே பகத் மீது சந்தேகம் அடைந்து விசாரிக்க தொடங்கிவிட்டாராம்... இதில் மன உளைச்சலில் இருந்துள்ளார் பகத்... எனவே சம்பவத்தன்றும் இதுபோல மனைவி விசாரிக்கவே, ஆத்திரத்தின் உச்சத்தில் செய்வதறியாது மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற பகத் குழந்தைகளையும் தீர்த்துகட்டிவிட்டு தூக்கில் தொங்கியிருக்கலாம் என்கிறது காவல்துறை...பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கும் காவல்துறை கடித்த‌தில் உள்ள 9 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.. 
தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

14 views

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

34 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

33 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

82 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

43 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

118 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.