கோயிலுக்கு அழைத்துச் சென்று பெண் பலாத்காரம் - அத்துமீறிய 2 இளைஞர்கள் அதிரடி கைது
பதிவு : ஜனவரி 08, 2021, 04:31 PM
உத்தரபிரதேசத்தில் சில நாட்களுக்கு முன் அரங்கேறிய பாலியல் பலாத்கார சம்பவத்தை போலவே நாகையிலும் பெண்ணை கோயிலுக்கு இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பயங்கரம் அரங்கேறி இருக்கிறது...
நாகை வெளிப்பாளையம் நாகதோப்பு பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், கூலிவேலை செய்து வருகிறார். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் அன்றாடம் வேலைக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று தன் சகோதரியின் வீட்டுக்கு அந்த பெண் சென்ற நிலையில் திடீரென அந்த வழியே வந்த 2 பேர் அவரை வழிமறித்துள்ளனர். வண்டிப்பேட்டையை சேர்ந்த அருண்ராஜ், அக்கரைகுளம் பகுதியை சேர்ந்த ஆனந்த் ஆகிய 2 பேரும் அந்த பெண்ணை வாயை பொத்தி அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 2 மணி வரை அந்த பெண்ணிடம் அத்துமீறிய அவர்கள், பின்னர் அவரை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. அந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அத்துமீறலில் ஈடுபட்ட அருண் ராஜ் மற்றும் ஆனந்த் என 2 பேர் மீதும் கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, மர்ம நபர்கள் சிலர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளனர். நடந்ததை வெளியே சொல்லக் கூடாது என்றும், அப்படி சொன்னால் கொன்றுவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்து போன அந்த பெண்ணின் சகோதரி தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் காவல் நிலையில் மனு அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோயில் வளாகத்தில் வைத்து பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. உத்தரபிரதேச சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் இப்போது நம் ஊரிலும் கணவனை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த இந்த பயங்கர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

180 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

30 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

31 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

81 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

40 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

115 views

இந்து கடவுள் பற்றி இழிவாக பேசுவதாக புகார் - திராவிடர் கழக கூட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே திராவிடர் கழகம் சார்பில் கூட்டம் நடத்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.