சிறுமியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேஸ்புக் நட்பு - காதலனை பார்க்க கிளம்பிய சிறுமிக்கு நேர்ந்த துயரம்
பதிவு : ஜனவரி 08, 2021, 01:34 PM
சமூக வலைதளங்களில் ஆண் நண்பர்களை கண்மூடித்தனமாக நம்பும் சிறுமிகளா நீங்கள்... இது உங்களுக்கான எச்சரிக்கை பதிவு...
17 வயது பள்ளி மாணவியை காணவில்லை என கோவை செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கின்றனர் அந்த சிறுமியின் பெற்றோர்... விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், சிறுமி வேளாங்கண்ணியில் இருப்பதை செல்போன் டவர் சிக்னல் மூலம் கண்டறிகின்றனர்... அதன் பலனாக, சிறுமி மீட்கப்பட்டு கோவை செல்வபுரம் காவல்நிலையத்தில் அழைத்துவரப்படுகிறார்... இதை தொடர்ந்து போலீசார் விசாரித்த போது, அந்த சிறுமி பாலியல் ரீதியாக வேட்டையாடப்பட்டிருக்கிறார்... அதுவும் 3 நாட்கள் ஒரு ஓட்டுநர், அடுத்த 3 நாட்கள் சிறுமியின் ஆண் நண்பர் என 2 பேர் சிறுமியை தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளனர்...கோவை செல்வபுரத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேஸ்புக்கிலே மூழ்கி கிடந்ததால் ஆண் நண்பர்கள் அதிகமாம்... அதில் ஒருவர் தான் கடலூரை சேர்ந்த 27 வயது இளைஞர் ஏழுமலை... முகநூலை தாண்டி இவர்களது நட்பு, காதல் என்ற போர்வையில் நேரில் சந்திப்பது வரை தொடர்ந்துள்ளது... திருச்சியில் இருவரும் சந்திப்பது என திட்டமிட்டுள்ளனர். திட்டத்தை செயல்படுத்த தன் மற்றொரு ஆண் நண்பரும், கால் டாக்சி ஓட்டுநருமான திருப்பூரை சேர்ந்த 30 வயதான சண்முகம் என்பவரிடம் உதவி கோரியுள்ளார் அந்த சிறுமி...சிறுமியின் திட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்த சண்முகம், தன் காரில் சிறுமியை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்....திருச்சிக்கு செல்ல திட்டமிட்ட கார், ஊட்டிக்கு சென்றது.... ஊட்டியில்  அறை எடுத்து தங்கிய சண்முகம், 3 நாட்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்....இதை தொடர்ந்து, மீண்டும் சிறுமியை திருச்சியில் விட்டுவிட்டு கோவை திரும்பியுள்ளார் சண்முகம்...திருச்சியிலும் சிறுமிக்கு அதே நிலை தான்... காதல் போர்வையில் ஏழுமைலை தன் பங்கிற்கு 3 நாட்கள் சிறுமியை பலாத்காரம் செய்து அனுப்பியுள்ளான்... இந்த நிலையில் தான், எங்கு செல்வது என தெரியாமல் வேளாங்கண்ணியில் தவித்துக்கொண்டிருந்த சிறுமி, செல்போனை ஆன் செய்த நிலையில், அதை வைத்து சிறுமியை மீட்டோம் என்கிறது காவல்துறை....சிறுமியிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார், கால்டாக்சி ஓட்டுநர் சண்முகம்,  ஏழுமலை ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

32 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

33 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

81 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

42 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

118 views

இந்து கடவுள் பற்றி இழிவாக பேசுவதாக புகார் - திராவிடர் கழக கூட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே திராவிடர் கழகம் சார்பில் கூட்டம் நடத்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.