கோயிலுக்கு வந்த பெண்ணுக்கு நடந்த பகீர் சம்பவம் - கோயில் பூசாரியே பெண்ணிடம் அத்துமீறிய அவலம்
பதிவு : ஜனவரி 08, 2021, 11:03 AM
உத்தரபிரதேசத்தில் கோயிலுக்கு சென்ற 50 வயதான பெண்ணை கோயிலின் பூசாரி உள்ளிட்ட கும்பல் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பதாயூன் அருகே உள்ள உகைதி கிராமத்தை சேர்ந்த 50 வயதான அங்கன்வாடி பணியாளர் ஒருவர் அங்குள்ள ஆசிரமத்தை ஒட்டியுள்ள கோயிலுக்கு வழிபட சென்றுள்ளார். ஆனால் சாமி கும்பிட சென்ற அவர், பல மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவியை காணாது கணவனும், அவரின் மகளும் தவித்து போயினர். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் புகார் மனுவை பெற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. இதனிடையே அடுத்த நாள் காலை 3 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு அவரின் வீட்டுக்கு வந்துள்ளது. அந்த பெண்ணின் வீட்டு கதவை தட்டிய அவர்கள், கோயிலுக்கு அருகே உள்ள கிணற்றில் விழுந்து விட்டதாகவும் தாங்கள் மீட்டு கொண்டு வந்ததாக கூறி நாடகமாடியுள்ளது. ஆனால் உடலில் ரத்த காயங்களுடன் கிடந்த அந்த பெண்ணை பார்த்து பதறிப்போன கணவர், தன் மனைவியை மருத்துவமனை கொண்டு செல்லுமாறு 3 பேரிடமும் கெஞ்சியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு 3 பேரும் தலைதெறிக்க ஓடியுள்ளனர். ஆனால் அளவுக்கதிகமான ரத்தப்போக்கு, உடலில் ஏற்பட்ட காயங்களால் அந்த பெண் துடிதுடித்து உயிரிழந்தார். அதன்பிறகு சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது தான் அவர் கொடூரமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பலியானது தெரியவந்தது. கோயிலுக்கு வந்த பெண்ணை கோயிலின் பூசாரியான சத்திய நாராயணன் மற்றும் அவரது கூட்டாளிகளான ஜஸ்பால், வேத்ராம் ஆகிய 3 பேரும் ஒன்று சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்துள்ளனர். ஒருநாள் முழுக்கவே அந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்த அந்த கும்பல், அவரின் பிறப்புறுப்பை சிதைத்தும், விலா எலும்புகளை உடைத்தும் கொடூரமாக துன்புறுத்தியிருக்கிறது. தன் தாய்க்கு நடந்த கொடூரத்தை வெளியே கொண்டு வந்த அவரின் மகள், நடந்ததை எல்லாம் காவல் நிலையத்தில் புகாராக அளித்திருக்கிறார். ஆனால் அதன் மீதும் நடவடிக்கை இல்லை என தெரிகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் பெண்ணின் உடல் 18 மணி நேரத்திற்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகே நடந்த அத்தனை கொடூரங்களும்  வெளிவந்துள்ளது. இதையடுத்து கோயிலின் பூசாரி மற்றும் அவரின் கூட்டாளிகள் என 3 பேர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த சம்பவத்தை மகளிர் ஆணையமும் கையில் எடுத்துள்ளதால் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தங்களது உறுப்பினரை சம்பவ இடத்துக்கு அனுப்பி விசாரணை நடத்தவுள்ளதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சியினரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரம் உகைதி காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் பெண்கள் மீதான கொடூர பாலியல் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வந்தாலும் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

"மும்பை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை" பாலியல் வன்கொடுமை தொடர்பான தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை தொடர்பான மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

8 views

டெல்லி விரைந்தார் நமச்சிவாயம் - பாஜகவில் இணைய போவதாக தகவல்

பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நமச்சிவாயம் ஜே.பி. நட்டாவை சந்தித்து பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது

37 views

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 11.5%-ஆக இருக்கும் - சர்வதேச நிதி ஆணையம் கணிப்பு

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது.

15 views

டெல்லி விவசாயிகள் போராட்டம் - போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்கும் வீடியோ

விவசாயிகள் பேரணியின்போது டெல்லியில் நங்லோய், நஜப்கார் சாலையில் போலீஸ் வாகனங்களை வன்முறையாளர்கள் சூறையாடிய காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்

59 views

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

74 views

செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டம் - குடியரசு தின நாளில் டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டதில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.