வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி கடத்தல் - தெலங்கானா முதலமைச்சரின் உறவினர்களை கடத்திய கும்பல்
பதிவு : ஜனவரி 07, 2021, 05:44 PM
தெலங்கானாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி முதலமைச்சரின் உறவினர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? விரிவாக பார்க்கலாம்....
தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் நெருங்கிய உறவினர் பிரவீன் ராவ். இவரது குடும்பத்திற்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் ஹைதரபாத்தின் அபிட்ஸ் பகுதியில் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக மற்றொரு தரப்புக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் அகிலப்பிரியா இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். நில விவகாரத்தை முடித்து தருவதாக கூறிய அகிலப்பிரியா, தன் கணவர் பார்கவ் ரெட்டியுடன் சேர்ந்து பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. ஆனால் நிலத்துக்கு சொந்தமான பிரவீன் ராவ் தரப்போ தங்கள் நிலத்தை விட்டு தராமல் இருந்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், வேறு மாதிரியான ஒரு திட்டத்தை தீட்டியது. வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறிய 15 பேர் கொண்ட கும்பல், ஹைதராபாத்தில் உள்ள பிரவீன் ராவ் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. அப்போது பிரவீன் ராவின் சகோதரர்களான நவீன் ராவ் மற்றும் சுனில் ராவ் ஆகியோரிடம் விசாரணை நடத்துவது போல் நடித்த அந்த கும்பல், வீட்டில் இருந்த பெண்களை தனி அறையில் வைத்து பூட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சகோதரர்கள் 3 பேரையும் காரில் ஏற்றி கடத்திச் சென்றது அந்த கும்பல். இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கவே, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 
அப்போது 2 கார்களில் இருந்த 8 பேரை மடக்கி பிடித்த போலீசார் பிரவீன் ராவ் மற்றும் அவரது சகோதரர்களை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதற்கு மூளையாக செயல்பட்டது ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் அகிலப்பிரியா மற்றும் அவரது கணவர் பார்கவ் ரெட்டி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். நில விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கைதாகி இருப்பது அங்கு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

136 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

62 views

பிற செய்திகள்

நாட்டுப்புறப்பாடல்களில் கலக்கும் இளைஞர் - பழமையில் புதுமையைப் புகுத்தி அசத்தல்

காஷ்மீரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் நாட்டுப்புற இசையை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

4 views

எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் சீனா - இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து

அருணாச்சல் பிரதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளது சீனா.

4 views

ராணுவ ரகசியங்கள் கசிந்த விவகாரம் : தீவிர விசாரணை வேண்டும் - ராகுல்காந்தி

இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் ஒரு பத்திரிகையாளருக்கு கொடுக்கப்பட்டது கிரிமினல் நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

27 views

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் - ரூ.2,691 கோடி நிதியுதவி இன்று விடுவிப்பு

பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சத்து 10 ஆயிரம் பயனாளிக்கான நிதியுதவியை, பிரதமர் மோடி இன்று விடுவிக்க இருக்கிறார்.

36 views

570 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் தேர்தலின் போது இடது ஜனநாயக முன்னணி அளித்த 600 வாக்குறுதிகளில் 570 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

19 views

மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை -தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.