அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சி.-யில் வன்முறை - துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு
பதிவு : ஜனவரி 07, 2021, 05:27 PM
உலகின் மிகவும் பாதுகாப்பான பகுதியான பார்க்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றம் போர்க்களமானது...
டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், மோதலில் காயமடைந்த 3 பேரும் உயிரிழந்தனர். அமெரிக்காவில் நடந்தது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பைடன் வெற்றிபெற்றார்.
அவருக்கு வெற்றிக்கான சான்றிதழை வழங்க அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி-யில் உள்ள அந்நாட்டின் நாடாளுமன்றம் கூடியது. இதற்கு அனுமதிக்க மாட்டோம் என அதிபர் டிரம்பின் குடியரசு கட்சியினர் எம்.பி.க்கள் 100-க்கும் மேற்பட்டோர் தெரிவித்ததால் பரபரப்பு தொற்றியது.இதற்கிடையே, டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடாளுமன்றம், வெள்ளை மாளிகை பகுதியில் கூடினர். அப்போது வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்தது என்று குறிப்பிட்டார். பிரதிநிதிகள் அவையில் இருப்பவர்களை வெளியேற்றுங்கள்... நம் பலத்தை காட்ட வேண்டிய நேரம் இது என டிரம்ப் பேசினார். இதையடுத்து, ஆத்திரம் அடைந்த டிரம்பின் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்திற்குள் நுழையை முயன்றனர். அவையை நோக்கி படையெடுத்தவர்களை காவலர்கள் கட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை..டிரம்ப் ஆதரவாளர்கள் சுவர்களில் ஏறி ஜன்னலை உடைத்துக் கொண்டு நுழையை முயன்றனர். ஒருக்கட்டத்தில் அவர்களுடைய பலம் அதிகரிக்க அவைக்குள் நுழைய தொடங்கினர்.இதனிடையே, நாடாளுமன்றத்தினுள் இருந்த எம்.பி.க்கள், தங்களால் வெளியேற முடியாது என்பதால் பதற்றம் அடைந்தனர்... தேர்தல் முடிவு தொடர்பான விவாதம் நிறுத்தப்பட்டது.. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தினுள் நுழைந்ததும் எம்.பி.க்கள் அனைவரையும் கேஸ் மாஸ்க் அணிய செய்து பாதுகாவலர்கள் வெளியேற்றினர்,போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர்  உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர்.உலகின் மிகப் பாதுகாப்பான இடங்களில் ஒன்றான அமெரிக்க நாடாளுமன்ற வளாகமே போர்க்களமானதுநிலைமை மோசமாகும் என அறிந்து கூடுதல் போலீசார் அங்கு விரைந்தனர். ஆதரவாளர்களின் உக்கிரம் அதிகரித்து நீண்ட நேரத்திற்கு பிறகு, "அமைதியாக இருங்கள்..." என டுவிட்டரில் டிரம்ப் கேட்டுக்கொண்டார்.டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் நீங்கள் மிகவும் சிறப்பானவர்கள் என போராட்டக்காரர்களை பாராட்டினார்.இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் சுமார் 3 மணி நேரங்களுக்கு பின்னர் வெளியேற்றப்பட்டனர்... அங்கு நிலைமை கட்டுக்குள் திரும்பியது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

டைனோசரின் படிமங்கள் கண்டெடுப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், அழிந்த விலங்கினமான டைனோசரின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

13 views

சீன உறவை அமைதியாக அமெரிக்கா தொடரும் - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல்

சீனாவுடனான உறவை அமைதியான நிலையில் அமெரிக்கா தொடரும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறி உள்ளார்.

13 views

ஒய்யார நடைபோடும் பென்குயின்கள்

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் சின்சினாட்டி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான விலங்கு மற்றும் பறவைகள் பராமரிக்கப்படும் நிலையில், பூங்காவில் வளர்க்கப்படும் பென்குயின்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டன.

16 views

நேபாளத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பம் - கைவிரித்து, ஒதுங்கிக் கொண்ட இந்திய அரசு

நேபாள நாடாளுமன்ற கீழ் அவையை கலைக்க பரிந்துரைத்த அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாக போட்டி நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

28 views

சிறந்த கார்பன் உறிஞ்சும் தொழில்நுட்பம் - டெஸ்லா நிறுவனர் மஸ்க் அறிவிப்பு

புவி வெப்பமயமாதலுக்கு காரணமான கார்பனை உறிஞ்ச முடியுமா...? எலான் மஸ்க் அறிவிப்பும்...நடைமுறையும் குறித்து விரிவாக பார்க்கலாம்...

79 views

நெதர்லாந்தில் அதிகரிக்கும் கொரோனா - உலக போருக்கு பின் முதல் முறையாக ஊரடங்கு

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக போருக்கு பின் நெதர்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.