டிரம்ப் கணக்குகள் 12 மணி நேரம் முடக்கம் - டுவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் அதிரடி
பதிவு : ஜனவரி 07, 2021, 05:21 PM
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரம் வெடித்த விவகாரத்தில் அதிபர் டிரம்புக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கலவரக்காரர்களுக்கு ஆதரவாக டிரம்ப் டுவிட்களை வெளியிட்டதும், டுவிட்டர் நிறுவனம் அவருடைய கணக்கை தற்காலிகமாக 12 மணி நேரங்களுக்கு முடக்கியது.ஒருமைப்பாட்டுக்கு எதிராக உள்ள 3 டுவிட்களையும் உடனடியாக நீக்கவில்லை என்றால் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என டிரம்பை எச்சரித்ததுவன்முறை அதிகரிக்க காரணமாகும் எனக் கூறி பேஸ்புக் நிறுவனமும் டிரம்பின் தகவல்களை நீக்கியது, அவருடைய கணக்கை 24 மணி நேரம் முடக்கியது. இன்ஸ்டாகிராம் நிறுவனமும் அவருடைய கணக்கை முடக்கியதுஜனநாயகத்தின் மீது நடந்த தாக்குதல் என்று டொனால்டு டிரம்பின் செயலை கடுமையாக விமர்சனம் செய்த ஜோ பைடன், அரசியலமைப்பை டிரம்ப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.டொனால்டு டிரம்பின் விஷமத்தனமான அரசியலால் அமெரிக்க நாடாளுமன்றம், அரசியலமைப்பு மற்றும் தேசம் முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை எதிர்க்கொண்டு உள்ளது என முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் டுவிட்டரில்  கண்டனம் தெரிவித்து உள்ளார்.கலவரத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், வாஷிங்டனில் நடைபெற்றுவரும் இழிவான நிகழ்வுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், அதிகார மாற்றம் அமைதியாக நடைபெற வேண்டும் என்றும் கூறினார். ஜனநாயகத்திற்கு எதிரானது என அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், முறையாகவும், அமைதியாகவும் அதிகாரப் பரிமாற்றம் தொடர வேண்டும் என்றும், சட்ட விரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையை  தகர்த்தெறிய அனுமதிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

184 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

144 views

பிற செய்திகள்

இலங்கை சுதந்திர தினம் : கரிநாள் என ஆவேசம் - ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி, இலங்கை சுதந்திர தினமான வரும் 4 ஆம் தேதியை கரிநாளாக அனுசரிக்க உள்ளதாக அந்நாட்டு தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.

8 views

கடல் குதிரை குட்டியிடும் வீடியோ காட்சி - இணையதளத்தில் டிரெண்டிங்

ஆஸ்திரேலியாவில் கடல் குதிரை குட்டியிடும் வீடியோ பதிவை சிட்னி மீன்வாழ் அருங்காட்சியகம் வெளியிட்டு உள்ளது.

9 views

இந்தியாவுடன் தான் வர்த்தகம் - இலங்கை உறுதி

இலங்கை, கொழும்பு துறைகத்தின் கிழக்கு முனையில், இந்தியாவுடன் தான் வர்த்தகம் செய்யப்படும் என இலங்கை உறுதியாக தெரிவித்துள்ளது.

5 views

தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்தவே பதவி - இலங்கை அமைச்சர்

இந்தியாவுடனும், குறிப்பாக தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவே, தனக்கு இந்த மீன்வளத்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளதாக, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

11 views

இலங்கைக்கு 5 லட்சம் தடுப்பூசிகள் - இலவசமாக வழங்கி இந்தியா உதவிக்கரம்

இந்திய அரசு நன்கொடையாக வழங்கியுள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கை அரசிடம் இன்று ஒப்படைக்கப்படுகின்றன.

9 views

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராகி சாதனை

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.

171 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.