காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனிக்கட்டிகள்
பதிவு : ஜனவரி 07, 2021, 04:47 PM
காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் எங்கும் வெண்போர்வை போர்த்தியது போன்று ரம்மியமாக காட்சியளிக்கிறது
காஷ்மீரில் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் பனிப்போர்வையால் மூடப்பட்டுள்ளது. வீடுகள், கார்கள், மரங்களில் பனிகட்டிகள் வெண்மேகமாக கொட்டி கிடக்கிறது. ஸ்ரீநகரில் ஆனந்த்நாக் - ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. பனிப்பொழிவு காரணமாக சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.சாலைகளில் குவிந்திருக்கும் பனியை அகற்றும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் இளைஞர்கள் பனிக்கட்டிகளை அள்ளி வீசி செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பனிசாரல் கொட்டுவதற்கு மத்தியில், இளைஞர்கள் சாலைகளில் கிடக்கும் கட்டிகளை எடுத்து விளையாடி வருகிறார்கள்... அங்கு தானமன்டி - பப்ளியாஸ் சாலை மூடப்பட்டுள்ளது.உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டதுஇமாச்சல பிரதேசத்திலும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்திருப்பதால் நலா-மணாலி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் வீடுகளை மலை போல் பனி சூழ்ந்திருந்தன.காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும்.... இதமான சூழலை மக்கள் ரசித்தும் வருகின்றனர்தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

20 views

செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டம் - குடியரசு தின நாளில் டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டதில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.

73 views

நாட்டின் 72 -வது குடியரசு தினம் கோலாகலம்

நாட்டின் 72 வது குடியரசு தினம் டெல்லி ராஜபாதையில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

107 views

ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி? - அறிந்துக்கொள்வோம் வரலாற்று தகவல்.

குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது? அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எத்தனை நாட்கள் ஆனது?. வரலாற்று தகவல்களை அறிந்துக்கொள்வோம்.

62 views

நாட்டுக்காக உழைக்கும் போது நாம் செய்கின்ற செயலின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும் - பிரதமர் மோடி

நாட்டுக்காக உழைக்கும் போது நாம் செய்கின்ற செயலின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

27 views

சீன ராணுவத்தினர் எல்லை தாண்ட முயற்சி - சீன நடவடிக்கையை முறியடித்த இந்திய வீரர்கள்

சிக்கிமில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தினர் நடவடிக்கையை, இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து உள்ளனர்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.