மைக்ரோ பைனான்ஸ் கம்பெனியில் ரூ.35 ஆயிரம் கடன் - தவணை கட்டாததால் சிறுமி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பயங்கரம்
பதிவு : ஜனவரி 07, 2021, 11:08 AM
கடனாக வாங்கிய தொகைக்கு தவணை வசூலிக்க சென்ற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம், சிறுமியின் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கொடூரம் ராஜபாளையத்தில் அரங்கேறியிருக்கிறது.
கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்து நின்ற பலருக்கும் கடன் தருவதாக கூறி ஆசை வார்த்தை காட்டி பணத்தை கொடுத்த நிறுவனங்கள் ஏராளம். அப்படி ராஜபாளையம் பகுதியில் உள்ள மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுவது போல முன் வந்திருக்கிறது ஒரு தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம்... சுய உதவிக்குழுக்களுக்கும், சிறிய தொழில் செய்பவர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் கொடுத்துவிட்டு வட்டி வசூலிப்பது வழக்கம். இவர்களிடம் அரசு மருத்துவமனை அருகே டீக்கடை நடத்தி வரும் அர்ஜூனன் என்பவர் 35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக சரியாக தவணை கட்டி வந்துள்ளார் அர்ஜூனன். சில நாட்களுக்கு முன் வட்டி வசூலிக்க வந்தவர்களிடம் 1950 ரூபாய் தவணை தொகையில் 1300 ரூபாயை மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள 650 ரூபாய் தொகையை வசூலிக்க வந்த நிறுவனத்தினர், அப்போதே இந்த மாதத்திற்கான தவணையையும் கட்டுமாறு வற்புறுத்தி உள்ளனர். ஆனால் பணத்தை கட்ட இயலாத சூழலில் அர்ஜூனன் இருக்கவே, ஆத்திரமடைந்த அவர்கள், டீக்கடையில் இருந்த கொதிக்கும் பாலை எடுத்து அர்ஜூனனின் மகள் ஸ்ரீவர்த்தினி மீது ஊற்றி உள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் திகைத்து போனார் அர்ஜூனன். கொதிக்கும் பால் ஊற்றப்பட்டதால் கதறிய சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேநேரம் வட்டி வசூலிக்க வருபவர்கள் கந்து வட்டிக்காரர்களை போல நடந்து கொள்வதாகவும், அடியாட்களை கொண்டு மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கிறார் அர்ஜூனனின் மனைவி கலாவதி. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம் கந்துவட்டிக்காரர்கள் தொடர்ந்து தொல்லை தருவதால் அரசு மருத்துவமனையின் முன் இருந்த அர்ஜூனனின் டீக்கடையை காலி செய்யுமாறு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலையையும் இழந்துவிட்டு ஒரு குடும்பமே நிராதரவாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடன் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ராஜபாளையத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவம் ஒரு உதாரணம்... 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

136 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

62 views

பிற செய்திகள்

"ஸ்டாலினால் கனவு மட்டுமே காண முடியும்" - முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக ஆட்சி கவிழும் என கனவு கண்ட திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக முடியும் என கனவு மட்டுமே காண முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

0 views

ஜன.26ல், 72 வது குடியரசு தின விழா - மெரினா சாலையில் முப்படை ஒத்திகை

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா சாலையில், முப்படையினர் கண்கவர் அணிவகுப்பு நடத்தி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

7 views

உயர்நிலைப் பள்ளிகளாக மாறும் பள்ளிகள் -பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் தகவல்

நடப்பு கல்வி ஆண்டில் 35 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 40 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவதாக, பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.

39 views

மெரினா வர்த்தக மையம் கட்டும் பணி - துணை முதல்வரின் தலைமையில் ஆலோசனை

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள மெரினா வர்த்தக மையம் தொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.

19 views

ஜெயலலிதாவின் நினைவிடம் 27-ம் தேதி திறப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்

44 views

ஜன.22-ல் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் வரும் வெள்ளியன்று, அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

139 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.