காற்றில் கொரோனா வைரஸ் அதிர்ச்சி தகவல் - ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல்
பதிவு : ஜனவரி 06, 2021, 04:25 PM
"கொரோனா வார்டு காற்றில் வைரஸ்..." ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல் நீண்ட நேரம் இருக்கிறது,தொற்று அதிகரிப்புக்கு காரணமாகிறது மருத்துவமனை பகுதிகளில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தலாம்...ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் இருக்கும் பகுதியில், காற்றில் வைரஸ் நீண்ட நேரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காற்றில் கொரோனா வைரஸ் செயல்திறனுடன் இருப்பது தொடர்பாக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு, ஐதராபாத்தில் உள்ள செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் சிஎஸ்ஐஆர் எம்டெக் இணைந்து ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.அந்த ஆய்வு அறிக்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் இருக்கும் மருத்துவமனையில் காற்றில் கொரோனா வைரஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படாத மருத்துவமனைகளில் அவ்வாறு இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இது மருத்துவமனை பகுதிகளில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.கொரோனா வார்டுகளில் காற்றில் இருக்கும் வைரஸ்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா சிகிச்சை வார்டில் ஒரு நோயாளி நீண்ட நேரம் இருக்கும் பட்சத்தில் 2 மணி நேரங்களுக்கு அதிகமாகவும், 2 மீட்டருக்கு சுற்றிலும் கொரோனா வைரஸ் இருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிகுறியில்லாத கொரோனா நோயாளிகள் இருக்கும் அறையில் அதிவேக காற்று இல்லாமல் இருந்தால் அவர்களிடம் இருந்து தொற்று பரவ வாய்ப்பு குறைவு எனவும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

184 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

144 views

பிற செய்திகள்

இலங்கை சுதந்திர தினம் : கரிநாள் என ஆவேசம் - ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி, இலங்கை சுதந்திர தினமான வரும் 4 ஆம் தேதியை கரிநாளாக அனுசரிக்க உள்ளதாக அந்நாட்டு தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.

8 views

கடல் குதிரை குட்டியிடும் வீடியோ காட்சி - இணையதளத்தில் டிரெண்டிங்

ஆஸ்திரேலியாவில் கடல் குதிரை குட்டியிடும் வீடியோ பதிவை சிட்னி மீன்வாழ் அருங்காட்சியகம் வெளியிட்டு உள்ளது.

10 views

இந்தியாவுடன் தான் வர்த்தகம் - இலங்கை உறுதி

இலங்கை, கொழும்பு துறைகத்தின் கிழக்கு முனையில், இந்தியாவுடன் தான் வர்த்தகம் செய்யப்படும் என இலங்கை உறுதியாக தெரிவித்துள்ளது.

5 views

தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்தவே பதவி - இலங்கை அமைச்சர்

இந்தியாவுடனும், குறிப்பாக தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவே, தனக்கு இந்த மீன்வளத்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளதாக, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

11 views

இலங்கைக்கு 5 லட்சம் தடுப்பூசிகள் - இலவசமாக வழங்கி இந்தியா உதவிக்கரம்

இந்திய அரசு நன்கொடையாக வழங்கியுள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கை அரசிடம் இன்று ஒப்படைக்கப்படுகின்றன.

9 views

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராகி சாதனை

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.

171 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.