அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு - அதிர்ச்சி அடைந்த சென்னை உயர் நீதிமன்றம்
பதிவு : ஜனவரி 06, 2021, 12:03 PM
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில்15 ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லாதது குறித்து அதிர்ச்சி அடைந்த சென்னை உயர் நீதிமன்றம், பெரிய பாளையம் காவல்ஆய்வாளர் வரும் 18 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் 2017 ம் ஆண்டு வெளியான திரைப்படம், 'தீரன் அதிகாரம் ஒன்று'. தமிழக நெடுஞ்சாலைகளை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை நோட்டமிட்டு, நாள் குறித்து, நள்ளிரவில் நுழைந்து, கண்ணில் படுபவர்களைக் கொடூரமாக கொன்று, கொள்ளையடிக்கும் பவாரியா கும்பலைப் பற்றிய உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்.இதேபாணியில், 2005 ம் ஆண்டு தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் வசித்து வந்த அப்போதைய அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் வீட்டுக்குள் நுழைந்த பவாரியா கொள்ளையர்கள், அவரை சுட்டுக் கொன்று விட்டு, 63 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரத்தில்,  பெரியபாளையம் போலீசார், ஒன்பது பேரை மட்டும் கைது செய்தனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 23 பேர் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ஓம் பிரகாஷ் பவாரியா எனும் ஓமன் பவாரியா, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை சிறையிலேயே இறந்து விட்டார். 
ஜெகதீஷ் புரா உள்ளிட்டோர், சிறையில் அடைக்கப்பட்டு,  வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில், 15 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, ஜெகதீஷ் புரா தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,15 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை 15 ஆண்டுகளாகியும் முடிக்க முடியாதது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.மொத்த குற்றவாளிகள், 32 பேரில், ஒன்பது பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 23 பேர் தலைமறைவாக உள்ளனர். பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டும், குற்றவாளிகளை கைது செய்ய முடியாததால் தான், அதுசம்பந்தமாக விளக்கம் அளிக்க பெரியபாளையம் காவல் ஆய்வாளரை ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள், சட்டத்தின் படி தண்டிக்கப்பட்டால் மட்டுமே, காவல் துறை எடுத்த முயற்சிகளுக்கு முழுமையான பலன் கிடைத்ததாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

137 views

பிற செய்திகள்

"ஸ்டாலினால் கனவு மட்டுமே காண முடியும்" - முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக ஆட்சி கவிழும் என கனவு கண்ட திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக முடியும் என கனவு மட்டுமே காண முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

19 views

ஜன.26ல், 72 வது குடியரசு தின விழா - மெரினா சாலையில் முப்படை ஒத்திகை

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா சாலையில், முப்படையினர் கண்கவர் அணிவகுப்பு நடத்தி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

7 views

உயர்நிலைப் பள்ளிகளாக மாறும் பள்ளிகள் -பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் தகவல்

நடப்பு கல்வி ஆண்டில் 35 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 40 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவதாக, பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.

41 views

மெரினா வர்த்தக மையம் கட்டும் பணி - துணை முதல்வரின் தலைமையில் ஆலோசனை

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள மெரினா வர்த்தக மையம் தொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.

21 views

ஜெயலலிதாவின் நினைவிடம் 27-ம் தேதி திறப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்

44 views

ஜன.22-ல் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் வரும் வெள்ளியன்று, அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

139 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.