பறவை காய்ச்சல்... பயத்தில் மக்கள்...
பதிவு : ஜனவரி 06, 2021, 11:14 AM
பறவை காய்ச்சலை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ள நிலையில் இதுதொடர்பான அச்சமும் மக்களிடையே அதிகரித்துள்ளது.
பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன? விரிவாக பார்க்கலாம்.கொரோனா, உருமாறிய கொரோனா என அடுத்தடுத்து நோய்கள் நம்மை துரத்தும் சூழலில் இப்போது பறவைக் காய்ச்சலும் அடுத்ததாக பீதியை கிளப்பியிருக்கிறது... பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் இவற்றின் உடலில் உருவாகும் வைரஸ் பின்னர் கொள்ளை நோயாக மாறும். இவ்வாறு பறவைகளின் உடலில் உருவாகும் வைரஸ், மனிதர்களிடையே பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது தான் ஏவியன் இன்புளூயன்சா எனப்படும் பறவைக் காய்ச்சல்...H5N1 என்ற வைரஸ் கடந்த 2014ல் கேரளாவில் உள்ள பண்ணைக் கோழிகளிடையே பரவியது. இதனால் ஆயிரக்கணக்கில் கோழிகள் செத்து மடிந்தன. பின்னர் 2016ல் H5N8 என்ற வைரஸ் கேரளாவின் குட்டநாடு பகுதியில் பரவி ஏராளமான பறவைகளை பலிகொண்டது..இந்த சூழலில் தான் இப்போது மீண்டும் பறவை காய்ச்சல் 2021ல் நுழைந்திருக்கிறது.
வெவ்வேறு பகுதிகளில் இருந்து இமாச்சல பிரதேசத்திற்கு வந்த பறவைக் கூட்டங்களில் சுமார் 2 ஆயிரம் பறவைகள் கூட்டமாக உயிரிழந்து கிடந்தது பிராணிகள் நல ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இறந்து போன பறவையினங்களின் மாதிரிகளை எடுத்து சோதனை செய்த போது H5N1 வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதேபோல் மத்திய பிரதேச மாநிலத்திலும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, கோழிக்கறி, முட்டை விற்பனைக்கு 15 நாட்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவின் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் அதிகரிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மக்களிடையே அச்சமும் அதிகரித்துள்ளது. இந்த பறவைக் காய்ச்சலுக்கு காரணமான வைரஸானது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதால் இதனை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாத்துகள், கோழிகள் உள்ளிட்டவை அழிக்கப்பட உள்ளன. அதேநேரம் பறவைக் காய்ச்சலால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது தமிழக அரசு.கேரளாவிலிருந்து தீவனங்கள், கோழிகள், பறவைகள் உள்ளிட்டவற்றை தமிழகத்திற்கு கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொண்டையில் வலி, காய்ச்சல், இருமல், சுவாசத்தில் சிரமம், குமட்டல், வயிற்றுப் போக்கு இவையெல்லாம் பறவைக் காய்ச்சலின் அறிகுறிகளாக மனிதர்களிடம் வெளிப்படும். மூச்சுக்குழாயை பாதிக்கும் தன்மை கொண்ட இந்த வைரஸ், மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதும் அச்சுறுத்தல் தரும் செய்தியாக உள்ளது. பறவை காய்ச்சலை கண்டு கொள்ளாமல் விட்டால் அது சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தாக்கி உயிருக்கே எமனாக முடியலாம் என்றும் கூறப்படுகிறது. 
எனவே பறவை காய்ச்சல் அபாயம் உள்ள சூழலில் பறவைகள் மற்றும் அதன் முட்டைகளை சரியாக வேக வைத்து சாப்பிட வேண்டும். ஆப்பாயில், பாதி வேக வைத்த சிக்கனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

257 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

207 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

171 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

கேரளாவைச் சேர்ந்த 98 வயதான நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி உடல்நலக்குறைவால் காலமானார்.

79 views

தனியார்மயமாகும் திருவனந்தபுரம் விமான நிலையம் - கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

36 views

"வேளாண் சட்டத்தை நிறுத்தி வைக்க தயார்" - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

டெல்லியில் உள்ள விக்யான் பவனில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில், விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

38 views

ஜோ பைடன், கமலா ஹாரிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

25 views

"டிராக்டர் பேரணிக்கான அனுமதி :டெல்லி காவல்துறைக்கே அதிகாரம்" - உச்சநீதிமன்றம்

குடியரசு தினத்தன்று நடத்தப்படும், டிராக்டர் பேரணியை அனுமதிக்க டெல்லி காவல்துறைக்கே அதிகாரம் என்றும், இதில் தலையிட போவதில்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

31 views

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் : கிராமம் - நகரம் வேறுபாட்டை குறைக்க முயற்சி பிரதமர் மோடி பேச்சு

கிராமத்திற்கும், நகரத்திற்குமான வேறுபாட்டை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.