வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பிரிட்டனில் என்ன நடக்கிறது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....
உலகின் முதலாவதாக கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த தொடங்கிய பிரிட்டனுக்கு, அதற்கான பலனை எளிதாக அறுவடை செய்ய முடியாத போதாத காலமாகதான் இருக்கிறது.டிசம்பர் 8-ஆம் தேதி தடுப்பூசியை போட தொடங்கிய சில நாட்களிலே கொரோனா வைரஸ் உருமாறியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானதுமேலும் இதனால் 70 சதவீதம் வேகமாக மனிதர்களுக்கு தொற்றை ஏற்படுத்த முடியும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்தார்.இதனையடுத்து அவசர அவசரமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி பிரிட்டன் அரசு அறிவித்திருந்த ஊரடங்கு தளர்வுகள் திரும்பபெறப்பட்டது. தெற்கு பிரிட்டன் தொடங்கி பிற பகுதிகளிலும் கொத்துக்கொத்தாக புதிய வைரஸ் பாதிப்பு பிரிட்டனை நிலைகுலைய செய்ததுகொரோனாவினால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் அங்கு அதிகரிக்க தொடங்கியது. கொரோனாவின் முதல் அலையில் இல்லாத தாக்கம் 3 வது அலையில் இருப்பதாக கூறப்பட்டது. இதுபோன்று மருத்துவமனையில் அனுமதிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் கடந்த 9 மாதங்களாக நெருக்கடியான நிலையில் பணியாற்றிய மருத்துவ ஊழியர்களுக்கு மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அவர்களே எங்களுடைய உயிரை காப்பாற்ற விதிகளை கடைபிடியுங்கள் என மக்களுக்கு கோரிக்கையை விடுத்தனர்.இதற்கிடையே பாதிப்பை கருத்தில் கொண்டு 3, 4 ஆம் படிநிலையென ஆங்காங்கே ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அதிகரித்தது. ஆனால் இதற்கெல்லாம் உருமாறிய கொரோனா சற்றும் கட்டுப்படுவதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்தது. தன்னுடைய பிடியை இறுக்கிய நிலையில் ஆபத்து அதிகரித்ததால் வேறு வழியில்லாமல் பிரிட்டன் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.தற்போது பிரிட்டன், ஸ்காட்லாந்தில் மக்கள் நடமாடத்திற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பகுதியிலும் பள்ளிகளும் மூட்டப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது கொரோனாவுக்கு எதிரான கடைசி போராட்டத்திற்குள் பிரிட்டன் செல்கிறது எனக் கூறியிருக்கிறார் போரிஸ் ஜான்சன். 7 வாரங்களுக்கு எந்த ஒரு தளர்வும் அறிவிக்கப்படாது எனக் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். வேகமாக பரவும் புதிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் கூட்டாக போராடி வெற்றி பெறுவோம் ஒத்துழையுங்கள் எனவும் அந்நாட்டு மக்களுக்கு போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.