இருமல் மருந்து அதிகம் கொடுத்து கொல்லப்பட்ட சிறுமி - விரக்தியில் தாய் எடுத்த முடிவால் உயிரிழந்த 5 வயது சிறுமி
பதிவு : ஜனவரி 06, 2021, 09:05 AM
டாக்டராக உள்ள தாய், தன் மகளுக்கு இருமல் மருந்து அதிகம் கொடுத்து கொல்ல முயன்றதில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி உயிரிழந்தார்.
பெற்ற தாயே தன் மகளை கொல்லும் அளவிற்கு என்னதான் நடந்தது? இப்போது பார்க்கலாம்.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த தண்டுக்காரன்பாளையத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி பெண் ஒருவர் 5 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிவிட்டு குப்பை பிரிக்கும் இடத்தில் வீசி எறிவதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மயக்க நிலையில் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறுமியை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற அந்த பெண், போலீசார் நடத்திய சோதனையின் போது பிடிபட்டார். அப்போது தான் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த எம்பிபிஎஸ் மருத்துவர் சைலஜா குமாரி என தெரியவந்தது. 
அப்படி என்றால் அவர் தாக்கிய சிறுமி யார்? எதற்காக தன் மகளை தாக்கி விட்டு குப்பை போல வீசிச் சென்றார்? என விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பெங்களூருவை சேர்ந்த தர்மபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட சைலஜா குமாரியின் 5 வயது மகள் தான் க்யாரா. குழந்தை பிறந்ததில் இருந்தே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் சைலஜா குமாரி. இவர்களின் விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வயதான தன் பெற்றோருடன் வசித்து வந்த சைலஜாவுக்கு கொரோனா ஊரடங்கால் மருத்துவ தொழிலும் முடங்கியதால் விரக்தியில் இருந்துள்ளார். கணவருடன் விவகாரத்து, பண நெருக்கடியால் சிக்கித் தவித்த அவர், என்ன செய்வதென தெரியாமல் கடந்த மாதம் 24ஆம் தேதி பேருந்தில் தன் மகளுடன் கிளம்பினார். 
மைசூருவில் இருந்து கிளம்பிய அவர் திருப்பூர் அருகே பேருந்தில் சென்ற போது சிறுமிக்கு திடீரென வாந்தி வந்ததால் உடனே பேருந்தை விட்டு இறங்கியிருக்கிறார் சைலஜா. ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்த சைலஜா, தன் மகளுக்கு அளவுக்கதிமான இருமல் மருந்தை கொடுத்துவிட்டு பின்னர் தன் மகளை அங்குள்ள குப்பை பிரிக்கும் கொட்டகை முன் போட்டு விட்டு சென்றுள்ளார். பின்னர் எலிமருந்தை தானும் சாப்பிட்டு விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் சைலஜா குமாரி. மயக்க நிலையில் போலீசாரால் மீட்கப்பட்ட சைலஜா குமாரியும், அவரின் மகள் க்யாராவும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் கோவைக்கு அழைத்துச் செல்லப்ப்டட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி க்யாரா உயிரிழந்தார். டாக்டரான அம்மா தன் மகளுக்கு கொடுத்தது இருமல் மருந்து தானா? அல்லது விஷமா? என விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள டாக்டர் சைலஜாகுமாரி போலீஸ் கஸ்டடியில் உள்ள நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

184 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

144 views

பிற செய்திகள்

ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்துமாறு மனு - அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லை

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல், பிப்ரவரி 15ஆம் தேதிக்கு முன் நடத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

9 views

பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யங்கள் - தங்கமாக ஜொலிக்கும் பறவை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான உத்வேகத்தை உயிர்பிக்க உவமையாக கூறப்படும் பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

100 views

மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது

தனது வசிகர பேச்சால், மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

29 views

வடமாநில கும்பலின் சீர்காழி படுகொலைகள்- தமிழகத்தில் மீண்டும் பவாரியா கும்பலா?

சீர்காழியில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளர் வீட்டின் கதவை தட்டிய வடமாநில கும்பல், கதவை திறந்த அடுத்த கணமே அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு கொள்ளை அடித்த‌து

608 views

நினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு - அதிமுகவினரின் கோயில் என கட்சியினர் உருக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு, நினைவில்லமாக திறந்து வைக்கப்பட்டது.

41 views

தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.