புதுச்சேரி அரசியலில் நடப்பது என்ன? - தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
பதிவு : ஜனவரி 06, 2021, 08:42 AM
யூனியன் பிரதேசமான புதுச்சேரியை தமிழ்நாட்டுடன் இணைக்க முயற்சி நடப்பதாக, முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டுகிறார்.
அப்படியொரு எண்ணமே மத்திய அரசுக்கு இல்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறுகிறார். புதுச்சேரி அரசியல் என்னதான் நடக்கிறது? பார்க்கலாம்.பிரெஞ்சு - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில், 1954ம் ஆண்டு புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரத்தை ஒட்டிய ஏனாம், கேரளத்தை ஒட்டிய மாஹே ஆகிய நான்கு பகுதிகளும் இந்தியாவுடன் இணைந்தன.இவை அடங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தனித்தன்மை பாதுகாக்கப்படும் என, அப்போதைய பிரதமர் நேரு வாக்குறுதி தந்தார்.இதற்கிடையே,1979ல் பிரதமர் மொரார்ஜி தேசாய், தமிழகத்துடன் புதுச்சேரியை இணைக்கும் நடவடிக்கையை தொடங்கினார். இதற்கு, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் ஆதரவளித்தார்.இதை எதிர்த்து வெடித்த மாபெரும் போராட்டம், மத்திய அரசை பின்வாங்கச் செய்தது. நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் தலை தூக்கி இருக்கிறது.ஏற்கனவே, துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி அரசுக்கும் இடையே அதிகார மோதல் நீடிக்கிறது. அரசின் கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் பரிசீலனைக்குப் பிறகே அனுமதி கிடைப்பதால், நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்பது புதுச்சேரி முதல்வரின் குற்றச்சாட்டு.இதைக் கண்டித்து அவ்வப்போது போராட்டங்களும் நடத்தப்படுகின்றன. வரும் 8ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட இருப்பதாக, ஆளும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது மட்டுமே என்ற முழக்கங்களும் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றன.இதற்கு மத்தியில்தான், புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க, பிரதமர் முயற்சிப்பதாகவும், சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை மாற்றிவிடுவார்கள் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.புதுச்சேரியை தமிழ்நாட்டுடன் இணைக்க மாட்டோம்"
"எந்த மாநிலத்தோடும் இணைக்கும் எண்ணம் இல்லை"
"இந்திய அரசின் சார்பில் இருந்து உறுதியாக சொல்கிறேன்"
"புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே தொடரும்"
இதற்கு பதிலளிக்கும் விதமாக, புதுச்சேரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, புதுச்சேரியை பிற மாநிலங்களோடு இணைக்கும் எண்ணம், மத்திய அரசுக்கு இல்லையென திட்டவட்டமாக தெரிவித்தார்.ஆனால், அரசியல் காரணங்களுக்காகவே, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முதல்வர் நாராயணசாமி முன்வைத்து வருவதாக தெரிவிக்கிறார், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராமதாஸ்...
கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தாமல், முதல்வர் நாராயணசாமி இதுபோன்ற குற்றச்சாட்டுகளையே சுமத்துகிறார் என்கிறார், பாஜக மாநில தலைவர் சாமிநாதன்...
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியோ, மத்திய அரசும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும், தங்களது அரசை முடக்கி, புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் முதற்கட்ட பணியைத் தொடங்கி விட்டதாக குற்றம்சாட்டுகிறார்.
தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், புதுச்சேரி முதல்வரின் இந்தக் குற்றச்சாட்டு, தேர்தலில்
ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

136 views

பிற செய்திகள்

முறையற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் - நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் குற்றச்சாட்டு

முறையற்ற ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளால் மதுரையில் காற்று மாசு சென்னையை விட அதிகமாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

14 views

திமுகவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் - தர்மபுரி எம்பி செந்தில்குமார் கருத்து

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைவது, கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று, தர்மபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

15 views

ஸ்மார்ட் திட்ட பணிகள் விரைவில் முடியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடியில் ஸ்மார்ட் திட்ட பணிகள் விரைவில் முடிவடையும் என்றும், பின்னர் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

16 views

ஜெயலலிதாவின் நினைவிடம் 27-ம் தேதி திறப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்

44 views

புதுச்சேரி அரசியலில் கூட்டணி குழப்பம் ? திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்

புதுச்சேரியில் தி.மு.க. மேற்கொண்டுள்ள பணிகளை கூட்டணி பிரச்சினை என குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

135 views

ஜன.22-ல் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் வரும் வெள்ளியன்று, அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

138 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.