ஜனவரி இறுதியில் 'விக்ரம்' படப்பிடிப்புக்கு செல்கிறார் கமல் -தேர்தலுக்கு முன்பே விக்ரம் திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர முயற்சி
பதிவு : ஜனவரி 06, 2021, 08:34 AM
தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரும் கமல் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்புகிறார்.. அரசியல் ஒரு பக்கம் சினிமா ஒரு பக்கம்... கமல் கணக்கு என்ன? விளக்குகிறது இந்த தொகுப்பு...
சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்துவரும் கமல், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறார்.பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவையே முந்திக்கொண்டு முதலில் பிரசாரத்தை தொடங்கிய கமல், தமிழகத்தில், மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.இந்த நிலையில், எதிர்வரும் பொங்கல் பண்டிகையுடன் தனது பிரசார பயணத்தை நிறைவு செய்யும் கமல், ஜனவரி இறுதியில் விக்ரம் படப்பிடிப்புக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
கமல் நடிப்பில் உருவாக இருக்கும் விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.அனிருத் இசையமைக்கிறார். கமலின் தயாரிப்பு நிறுவனமானராஜ்கமல் நிறுவனம் விக்ரம் படத்தை  தயாரித்து வருகிறது.
விக்ரம் படப்பிடிப்பு பணிகளில் ஒரு மாதம் தொடர்ந்து  ஈடுபடும் கமல், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும் மீண்டும் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
ஏற்கெனவே, தேர்தல் பிரசாரத்திலும், கட்சிப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் கமல், அவ்வப்போது தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கும்bசென்று வருகிறார்.இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஒரு பக்கம் தீவிர அரசியலில்  ஈடுபட்டு வருவதுடன், மற்றொரு பக்கம் சினிமாவிலும் கவனம் செலுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியன்-2 படம்தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருந்த கமல், அரசியல் வருகைக்குப் பிறகும், அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.தேர்தலுக்கு முன்பாகவே தனது விக்ரம் படத்தை திரைக்கு கொண்டு வர முழு முயற்சியில் கமல் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் விக்ரம் படத்தில் அரசியல் பஞ்ச் அனல் பறக்கும் என அவரது ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

248 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

193 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

154 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

131 views

பிற செய்திகள்

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

224 views

நாற்காலி' திரைப்பட பாடல் வெளியீடு - பாடலை வெளியிட்டு முதலமைச்சர் மகிழ்ச்சி

இயக்குநர் அமீர் நடித்துள்ள நாற்காலி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் புகழை எடுத்துரைக்கும் விதமான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

27 views

'மாஸ்டர்' மேக்கிங் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

434 views

பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது ஏன்? - விளக்கம் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி

பிறந்தநாளன்று பட்டாக்கத்தியால் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் சேதுபதி அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.

29 views

நடிகர் விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் - திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.

16 views

மாஸ்டர் படம் பார்த்த '96' இயக்குனர்

புதுக்கோட்டையில் மாஸ்டர் திரைப்படத்தை, 96 பட இயக்குனர் பிரேம் குமார் தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.