100 மில்லியன் பார்வைகளை கடந்த 'வாத்தி கம்மிங்'
பதிவு : ஜனவரி 06, 2021, 08:27 AM
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் படம் என்றாலே பாடல்கள் மீதும் ஒரு எதிர்பார்ப்பு உருவாகும். 2016ம் ஆண்டு வெளியான தெறி படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான என் ஜீவன் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த பாடல் யூடியூபில் இதுவரை 10 கோடியே 80 லட்சம் பார்வைகளுக்கு மேல் கடந்துள்ளது2017ம் ஆண்டில் வெளியான மெர்சல் திரைப்படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ஆளப்போறான் தமிழன் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்த பாடலுக்கு யூடியூபில் இதுவரை 13 கோடிக்கு மேல் பார்வைகள் கிடைத்துள்ளன.2019ம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் குரலில் உருவான வெறித்தனம் பாடல் யூடியூபில் இதுவரை 11 கோடிக்கு மேல் பார்வைகளை கடந்துள்ளதுஅந்த வகையில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 100 மில்லியன்..அதாவது 10 கோடிக்கு மேல் பார்வைகளை கடந்துள்ளது. ஆனால் இது பாடல் வரிகள் அடங்கிய லிரிக் வீடியோதான். படம் வெளியான பின்பும் வீடியோ காட்சியாகவே வெளியாகும் பாடலுக்கு இதை விட அதிக எண்ணிக்கையில் பார்வைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆனால் தற்போது வரை மாரி 2 படத்தில் யுவன் இசையில் தனுஷ் குரலில் உருவான ரவுடி பேபி பாடல்தான் 1 பில்லியன் , அதாவது 100 கோடி பார்வைகளுக்கு மேல் பெற்று முதலிடத்தில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

180 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

ஆஸ்கர் நோக்கி... சூர‌ரைப்போற்று

ஆஸ்கர் விருதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது சூர‌ரைப்போற்று திரைப்படம்.. இந்த சூழலில் ஆஸ்கர் விருது குறித்தும், அதை வெல்ல சூர‌ரைப்போற்று திரைப்படம் கடக்க வேண்டிய தொலைவு குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

193 views

ஓ.டி.டி-ல் வெளியாகும் விஜய்யின் "மாஸ்டர்"

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

19 views

"கர்ணன் - அனைத்தும் கொடுப்பான்" : அப்டேட் கொடுத்த சந்தோஷ் நாராயண‌ன்

கர்ண‌ன் திரைப்படத்தை பார்த்து பிரம்மித்து போனதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண‌ன் கூறியுள்ளார்.

18 views

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

74 views

GODZILLA VS KONG டிரெய்லர் வெளியீடு - சமூக வலைத்தளங்களில் வரவேற்பு

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் GODZILLA VS KONG எனும் ஆங்கிலத்திரைப்படம் வெளியாக உள்ளது.

31 views

நவ. 4-ம் தேதி அண்ணாத்த வெளியீடு - விஜய்யின் தளபதி 65 வெளியாகுமா..?

ரஜினியின் அண்ணாத்த படம், தீபாவளிக்கு ரிலீசாகும் என்று, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.