இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள்
பதிவு : ஜனவரி 06, 2021, 07:50 AM
இசையமப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளை இன்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். இசைத்துறையில் ரஹ்மான் புகுத்திய புதுமைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.
40வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நேரம் அது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஒரு 25 வயது இளைஞனுக்கு..அதுவும் தான் இசையமைத்த முதல் படத்திற்கு வழங்கப்படுகிறது. அப்படி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசை புயல் என்ற பெயர் கிடைத்ததில் ஆச்சர்யமில்லை. தேசிய விருதுக்கான இசையமைப்பாளரை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் தமிழ் இயக்குனர் பாலு மகேந்திராவும் இருந்தார். தேவர் மகன் படத்திற்காக இளையராஜாவுக்கா அல்லது ரோஜா படத்திற்காக ரஹ்மானுக்கா என தீர்மானிக்க வேண்டிய தருணம். மிகுந்த யோசனைக்கு பிறகு ரஹ்மானுக்கு தனது 2 வாக்குகளை வழங்கினார் பாலுமகேந்திரா. அதற்கு அவர் சொன்ன காரணம், ஒரு 25 வயது இளைஞன், தனது முதல் படத்திலேயே இளையராஜா போன்ற ஜாம்பவான்களுக்கு இணையான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறான். பிற்காலாத்தில் இந்த இளைஞன் எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் பெறலாம். ஆஸ்கர் கூட . ஆனால் இந்த விருது மிகவும் முக்கியம் என நினைத்ததால் தனது வாக்குகளை ரஹ்மானுக்கு வழங்கியிருக்கிறார் பாலுமகேந்திரா. அவரது கணிப்பு உண்மையானது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளி வந்தார் ரஹ்மான். ரோஜா படம் வந்தபோது, அதற்கு முன்பு வரை யாரும் கேட்டிராத வகையில், டிஜிட்டல் ஒலியை அறிமுகம் செய்து, ஒலியின் தரத்தில் ஒரு புதிய உச்சத்தை எட்டியிருந்தார் ரஹ்மான். அன்று முதல் இன்று வரை நிறைய புது புது ஒலிகளை தனது இசையில் கோர்ப்பது மட்டுமின்றி, பாடல்களை உருவாக்குவதிலும் தொடர்ச்சியாக புதுமையை கையாண்டு வருகிறார் ரஹ்மான். ரிதம் படத்தின் நதியே நதியே பாடல் முழுக்க தண்ணீரின் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும். வண்டுகளின் ரீங்காரம், மழை என பலவிதமான ஒலிகளை பயன்படுத்தியுள்ளார். பாடல்களுக்கு மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் இதை செய்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில், மொட்ட பாஸ் என தலையை தட்டும் போது வரும் ஒலியை பில்லியட்ஸ் விளையாட்டில் பயன்படுத்தும் பந்துகளை மேஜையில் கொட்டி ஒல்லிப்பதிவு செய்திருந்தார். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என விருப்பப்பட்ட ரஹ்மான், அந்த ஆசையை இசைத்துறையில் நிறைவேற்றிக்கொண்டார். அவர் பயன்படுத்திய மென்பொருட்கள், புது புது எலக்ட்ரானிக் கருவிகளை தான் அவருக்கு பின் வந்த இளம் இசையமைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். ரஹ்மான் அறிமுகம் செய்த உன்னிக்கிருஷ்ணன் தனது முதல் படத்திலேயே சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பெற்றார். இந்த பிரிவில் ஒரு தமிழ் பாடல் தேசிய விருது பெற்றதும் இதுவே முதன் முறை. ஹரினி, சின்மயி, நரேஷ் ஐயர் என பல பாடகர்களை அறிமுகம் செய்துள்ளார். தற்போது இளைஞர்களின் ஃபேவரிட்டாக உள்ள சித் ஸ்ரீராமை அறிமுகம் செய்ததும் ரஹ்மான் தான். இப்படி பல புதுமைகளை செய்து , இன்றும் அனைவரது மனங்களையும் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார் இசைப்புயல்.....

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

136 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

62 views

பிற செய்திகள்

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

248 views

நாற்காலி' திரைப்பட பாடல் வெளியீடு - பாடலை வெளியிட்டு முதலமைச்சர் மகிழ்ச்சி

இயக்குநர் அமீர் நடித்துள்ள நாற்காலி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் புகழை எடுத்துரைக்கும் விதமான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

31 views

'மாஸ்டர்' மேக்கிங் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

510 views

பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது ஏன்? - விளக்கம் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி

பிறந்தநாளன்று பட்டாக்கத்தியால் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் சேதுபதி அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.

29 views

நடிகர் விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் - திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.

16 views

மாஸ்டர் படம் பார்த்த '96' இயக்குனர்

புதுக்கோட்டையில் மாஸ்டர் திரைப்படத்தை, 96 பட இயக்குனர் பிரேம் குமார் தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.