கோவிஷீல்டு தயாரிக்க அனுமதி கடிதம் வழங்கிய மத்திய அரசு
பதிவு : ஜனவரி 04, 2021, 01:53 PM
மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனத்திற்கு, கொரோனா தடுப்பூசி தயாரித்து விநியோகிப்பதற்கான அனுமதி கடிதத்தை, இந்திய மருந்து கட்டுப்பாட்டுக் கழகம், வழங்கியுள்ளது.
அந்த அனுமதி கடிதத்தில், தடுப்பு மருந்தில் இடம் பெற வேண்டிய மற்ற மூலக்கூறுகள், அதன் அளவு அதனை சேமித்து வைக்கத் தேவையான வெப்பநிலை, உள்ளிட்டவை வரையறுக்கப்பட்டுள்ளன. தடுப்பு மருந்து மருந்து பாட்டில் அளவு 0.5 மி.லி. ஆக இருக்க வேண்டும் என அந்த அனுமதி கடிதத்தில், குறிப்பிடப்பட்டுள்ளது. 12 வயதுக்கு மேற் கொண்ட நபர்களுக்கு உடலில் சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்க 28 நாள், இடைவெளியில் 2 முறை தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டுக்கழகம் கூறியுள்ளது. தடுப்பூசி 6 மாதங்கள் வரை பூஜ்யம் இரண்டு டிகிரி செல்சியஸ் முதல் பூஜ்யம் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை சேமித்து வைக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதி அவசர கால அடிப்படையில் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பரிசோதனை முறை அடிப்படையில் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படுவதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டுக்கழகம் கூறியுள்ளது. மருந்து குறித்த அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அதன் இணையத்தளத்தில் தெளிவாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இறுதிகட்ட சோதனை நடைபெற்று முடியும் வரை முதல் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளின் போது நடத்தப்பட்ட பரிசோதனைகளின் சமீபத்திய தரவுகளை அடிக்கடி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இந்திய மருந்து கட்டுப்பாட்டுக்கழகம் கூறியுள்ளது.  தடுப்பூசி அவசர கால அடிப்படையில் போடப்பட்ட பின்னர் அதன் பாதுகாப்பு தன்மை பற்றி முதல் இரண்டு மாதங்களுக்கு ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் அதன் பிறகு மாதத்திற்கு ஒரு முறையும் தரவுகளை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய மருந்து கட்டுப்பாட்டுக்கழகம் அந்த அனுமதி கடித்தில் வலியுறுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

137 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

62 views

பிற செய்திகள்

நாட்டுப்புறப்பாடல்களில் கலக்கும் இளைஞர் - பழமையில் புதுமையைப் புகுத்தி அசத்தல்

காஷ்மீரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் நாட்டுப்புற இசையை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

6 views

எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் சீனா - இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து

அருணாச்சல் பிரதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளது சீனா.

4 views

ராணுவ ரகசியங்கள் கசிந்த விவகாரம் : தீவிர விசாரணை வேண்டும் - ராகுல்காந்தி

இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் ஒரு பத்திரிகையாளருக்கு கொடுக்கப்பட்டது கிரிமினல் நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

27 views

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் - ரூ.2,691 கோடி நிதியுதவி இன்று விடுவிப்பு

பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சத்து 10 ஆயிரம் பயனாளிக்கான நிதியுதவியை, பிரதமர் மோடி இன்று விடுவிக்க இருக்கிறார்.

36 views

570 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் தேர்தலின் போது இடது ஜனநாயக முன்னணி அளித்த 600 வாக்குறுதிகளில் 570 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

19 views

மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை -தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.