கோவாக்சின் தடுப்பூசி - தயாரிப்பும்.. செயல்பாடும்..
பதிவு : ஜனவரி 04, 2021, 01:48 PM
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி எப்படி தயாரிக்கப்படுகிறது.... எப்படி செயல்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்....கொள்வோம்...
உலக அரங்கில் இந்தியவை பெருமையடைய செய்திருக்கும் கோவக்சின் தடுப்பூசி, 'இன்ஆக்டிவ்' என்ற செயலற்ற முறையில் தயாரிக்கப்பட்டது.  இம்முறையில் முதலில் முழுமையான வளர்ச்சி பெற்ற வைரஸ்கள் ஆய்வுக்கூடங்களில் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்படும்.அவ்வாறு உருவாக்கப்பட்ட புதிய வைரஸ்கள் ஃபார்மலீன், ஃபார்மல்டீஹைட் உள்ளிட்ட ரசாயனங்கள் மூலம் அழிக்கப்படும் அல்லது செயலிழக்க செய்யப்படும். சில சந்தர்ப்பங்களில் வெப்பம் அல்லது கதிர்வீச்சால்கூட செயலிழக்கச் செய்யப்படலாம். பின்னர் செயலிழந்த வைரஸ்கள் அதிக எண்ணிக்கையில் பல்கி்ப்பெருகச்செய்யப்பட்டு, அதற்கான திரவத்துடன் தடுப்பூசி மருந்தாக தயாரிக்கப்படும். பின்னர் ஊசியின் வாயிலாக மனித உடலில் செலுத்தப்படும். அப்போது மனித உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி போராடுவதுடன், மேலும் வலுவடைகிறது. பின்நாட்களில் உண்மையான கொரோனா வைரஸ் உடலில் நுழைந்தால் அதனை அழிக்கும் வல்லமையை பெறும். இந்த செயலற்ற வைரஸ்கள் தொற்றுநோயை ஏற்படுத்தாது, மாறாக நோயெதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இந்த தடுப்பூசியை  2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் பராமரிக்கலாம் என்பதால் இப்போது நடைமுறையில் இருக்கும் குளிர்சங்கிலி முறையில் உலகின் எந்த மூலைக்கும் எளிதில் கொண்டுச் செல்லலாம்...  பாரத் பயோடெக் நிறுவனத்தின் எம்.டி., டாக்டர் கிருஷ்ணா எல்லா கடந்த ஆகஸ்ட் மாதம் பேசுகையில், இந்த தடுப்பூசி மலிவானதாக இருக்கும் என்றும் தண்ணீர் பாட்டிலை விடவும் விலை குறைவாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். அவருடைய கூற்றப்படி தடுப்பூசி 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் முதலாவதாக பயன்பாட்டுக்கு வந்த பைசர் நிறுவன தடுப்பூசியின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 2 ஆயிரத்து  724 ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் இந்திய தடுப்பூசியின் விலை மிக, மிக மலிவானதாகும்... அமெரிக்காவில் கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்க ஓக்யூஜென் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இன்று உலகம் முழுவதும் ஐ.நா.வின் யூனிசெஃப் நிறுவனம் வழங்கும் தடுப்பூசிகளில் சுமார் 60 சதவீதம் இந்தியாவில் தயாராகுகிறது. இப்போது இங்கு விலை குறைவான, பாதுகாப்பான மற்றும் எளிதாக கொண்டுச் செல்லும் வகையிலான தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே சூரிய ஒளியாகவே மாறியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

136 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

62 views

பிற செய்திகள்

எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் சீனா - இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து

அருணாச்சல் பிரதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளது சீனா.

4 views

ராணுவ ரகசியங்கள் கசிந்த விவகாரம் : தீவிர விசாரணை வேண்டும் - ராகுல்காந்தி

இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் ஒரு பத்திரிகையாளருக்கு கொடுக்கப்பட்டது கிரிமினல் நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

24 views

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் - ரூ.2,691 கோடி நிதியுதவி இன்று விடுவிப்பு

பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சத்து 10 ஆயிரம் பயனாளிக்கான நிதியுதவியை, பிரதமர் மோடி இன்று விடுவிக்க இருக்கிறார்.

33 views

570 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் தேர்தலின் போது இடது ஜனநாயக முன்னணி அளித்த 600 வாக்குறுதிகளில் 570 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

17 views

மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை -தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

17 views

ஜன.27, 28-ல் பி.சி.ஆர். பரிசோதனை - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்

பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் , மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.