கர்நாடகாவில் ரூபா ஐபிஎஸ் பணிமாற்றம் - கைவினை பொருட்கள் மேம்பாட்டுத்துறை இயக்குநராக நியமனம்
பதிவு : ஜனவரி 01, 2021, 02:25 PM
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா அம்மாநில கைவினை பொருட்கள் மேம்பாட்டுத்துறை மேலாண்மை இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது உள்பட பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.667 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை எடுத்த நிறுவனம் தொடர்பான சர்ச்சையில் போலீஸ் ஐ.ஜி.யாக இருந்த ரூபா மற்றும் பெங்களூரு கூடுதல் கமிஷ்னராக இருந்த ஹேமந்த் நிம்பால்கார் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. இந்நிலையில் இருவரையும் அம்மாநில அரசு பணிமாற்றம் செய்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரியான ரூபா மாநில கைவினை பொருட்கள் மேம்பாட்டுத்துறை மேலாண்மை இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை டுவிட்டரில் உறுதி செய்துள்ள ரூபா, தன்னுடைய புதிய பணியை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தனக்கு பதவி என்பது ஒரு பொருட்டே கிடையாது எனக் கூறியிருக்கும் அவர் பொதுமக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஊழல்வாதிகளை தண்டிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உண்மையை வெளிக் கொண்டுவருதல், உறுதியான நடவடிக்கை என்பது ஆபத்தான ஒன்று என்பது எனக்கு தெரியும் எனக் கூறியிருக்கும் ரூபா, எந்த பதவியாக இருந்தாலும் சமரசமின்றி என்னுடைய பணி தொடரும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

"மும்பை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை" பாலியல் வன்கொடுமை தொடர்பான தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை தொடர்பான மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

8 views

டெல்லி விரைந்தார் நமச்சிவாயம் - பாஜகவில் இணைய போவதாக தகவல்

பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நமச்சிவாயம் ஜே.பி. நட்டாவை சந்தித்து பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது

37 views

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 11.5%-ஆக இருக்கும் - சர்வதேச நிதி ஆணையம் கணிப்பு

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது.

15 views

டெல்லி விவசாயிகள் போராட்டம் - போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்கும் வீடியோ

விவசாயிகள் பேரணியின்போது டெல்லியில் நங்லோய், நஜப்கார் சாலையில் போலீஸ் வாகனங்களை வன்முறையாளர்கள் சூறையாடிய காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்

59 views

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

74 views

செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டம் - குடியரசு தின நாளில் டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டதில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.