2021 புதிய வரவுகள் - அஜித் - விஜய் இருவருக்கும் வெளியாக இருக்கும் படங்கள் என்ன?
பதிவு : ஜனவரி 01, 2021, 02:15 PM
2021ம் ஆண்டில் நடிகர்கள் அஜித் - விஜய் இருவருக்கும் வெளியாக இருக்கும் படங்கள் என்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
அஜித்

2019ம் ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வெளியாகின. இதை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. சண்டை காட்சியில் நடிகர் அஜித் காயமடைந்த செய்தி அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அஜித்தின் புதிய புகைப்படம் வெளியாகி மீண்டும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. யுவன் இசையில் மிரட்டலான தீம் மியூசிக் இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள வலிமை 2021ம் ஆண்டு திரைக்கு வரும் என தெரிகிறது. 

விஜய்

2019ம் ஆண்டு தீபாவளிக்கு பிகில் வெளியானது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவானது. இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நாயகியாக மாளவிகா மோகன், முக்கிய கதாப்பாத்திரங்களில் ஆன்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் என நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ளது. அனிருத் இசையில் பாடல்களும் ஹிட்டாகிய நிலையில் , 2020 தீபாவளிக்கு திரைக்கு வர வேண்டிய மாஸ்டர் கொரோனா பரவலால் திரைக்கு வராமல் இருந்தது.ஆனால் தற்போது திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளதால், 2021ம் ஆண்டின் பொங்கல் வெளியீடாக ஜனவரி 13ம் தேதி திரைக்கு வருகிறது.

இதை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 65-யும் 2021ம் ஆண்டே வெளியாக இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய அறிவிப்பு இனி தான் வெளியாகும்.  

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

180 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

ஆஸ்கர் நோக்கி... சூர‌ரைப்போற்று

ஆஸ்கர் விருதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது சூர‌ரைப்போற்று திரைப்படம்.. இந்த சூழலில் ஆஸ்கர் விருது குறித்தும், அதை வெல்ல சூர‌ரைப்போற்று திரைப்படம் கடக்க வேண்டிய தொலைவு குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

195 views

ஓ.டி.டி-ல் வெளியாகும் விஜய்யின் "மாஸ்டர்"

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

19 views

"கர்ணன் - அனைத்தும் கொடுப்பான்" : அப்டேட் கொடுத்த சந்தோஷ் நாராயண‌ன்

கர்ண‌ன் திரைப்படத்தை பார்த்து பிரம்மித்து போனதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண‌ன் கூறியுள்ளார்.

18 views

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

74 views

GODZILLA VS KONG டிரெய்லர் வெளியீடு - சமூக வலைத்தளங்களில் வரவேற்பு

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் GODZILLA VS KONG எனும் ஆங்கிலத்திரைப்படம் வெளியாக உள்ளது.

31 views

நவ. 4-ம் தேதி அண்ணாத்த வெளியீடு - விஜய்யின் தளபதி 65 வெளியாகுமா..?

ரஜினியின் அண்ணாத்த படம், தீபாவளிக்கு ரிலீசாகும் என்று, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.