"புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை" - பெங்களூரில் 144 தடை உத்தரவு அமல்
பதிவு : டிசம்பர் 31, 2020, 06:22 PM
கர்நாடக மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
பெங்களூரில் நண்பகல் 12 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மக்கள் அதிகம் கூடும் பகுதியான எம்.ஜி.ரோடு மற்றும் பிரிகேட் ரோடு பகுதிகளில் போலீசார் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர் மாநகரம் முழுவதும் சுமார் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் மக்கள் நடமாட்ட​த்தை  கண்காணித்து வருகின்றனர். இதுதவிர நகரிலுள்ள மேம்பாலங்களில் இரவு 10 மணிக்கு மேல் போக்குவரத்து தடை செய்யப்படுவதாகவும், இளைஞர்கள் வாகனத்தில் சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது என்றும் பெங்களூரு மாநகர ஆணையர் கமால்பந்த் எச்சரித்துள்ளார். தனியார் விடுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக 200 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என்றும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒலி பெருக்கிகளின் ஒலியை அதிகமாக  பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புத்தாண்டு கொண்டாட்ட  நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரது விவரங்களையும் முழுமையாக சேகரிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அரசின் இந்த உத்தரவுக்கு ஆதரவு, எதிர்ப்பும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

"மும்பை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை" பாலியல் வன்கொடுமை தொடர்பான தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை தொடர்பான மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

8 views

டெல்லி விரைந்தார் நமச்சிவாயம் - பாஜகவில் இணைய போவதாக தகவல்

பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நமச்சிவாயம் ஜே.பி. நட்டாவை சந்தித்து பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது

37 views

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 11.5%-ஆக இருக்கும் - சர்வதேச நிதி ஆணையம் கணிப்பு

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது.

15 views

டெல்லி விவசாயிகள் போராட்டம் - போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்கும் வீடியோ

விவசாயிகள் பேரணியின்போது டெல்லியில் நங்லோய், நஜப்கார் சாலையில் போலீஸ் வாகனங்களை வன்முறையாளர்கள் சூறையாடிய காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்

59 views

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

74 views

செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டம் - குடியரசு தின நாளில் டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டதில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.