சீரம் நிறுவன தடுப்பூசிக்கு இன்று ஒப்புதல் வழங்கப்படுமா?" - ​நிபுணர் குழுவினர் ஆலோசனைக்கு பின்னர் இரவு அறி​விப்பு?
பதிவு : டிசம்பர் 30, 2020, 06:42 PM
சீரம் நிறுவனத்தின், கோவிஷில்டு கொரோன தடுப்பூசிக்கு இன்று அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தங்கள் நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளை, அவசர கால அடிப்படையில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அனுமதிக்குமாறு, பாரத் பயோடெக்,ஃபைசர் மற்றும் புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் ஆகியவை  விண்ணப்பம் அளித்து இருந்தது. இந்த விண்ணப்பங்களின்  மேல் இன்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, தனது முடிவை இன்று அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டு  அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்  கழகத்தின் தடுப்பூசியை, இந்தியாவில் கோவிஷில்டு என்ற பெயரில் புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது 5 கோடி புட்டிகள் தயார் நிலையில் உள்ளது. வரும் மார்ச் 31-க்குள் மேலும் 10 கோடி புட்டிகளை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து நிபுணர் குழு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில், எந்நேரமும் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

180 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

"மும்பை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை" பாலியல் வன்கொடுமை தொடர்பான தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை தொடர்பான மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

8 views

டெல்லி விரைந்தார் நமச்சிவாயம் - பாஜகவில் இணைய போவதாக தகவல்

பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நமச்சிவாயம் ஜே.பி. நட்டாவை சந்தித்து பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது

37 views

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 11.5%-ஆக இருக்கும் - சர்வதேச நிதி ஆணையம் கணிப்பு

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது.

15 views

டெல்லி விவசாயிகள் போராட்டம் - போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்கும் வீடியோ

விவசாயிகள் பேரணியின்போது டெல்லியில் நங்லோய், நஜப்கார் சாலையில் போலீஸ் வாகனங்களை வன்முறையாளர்கள் சூறையாடிய காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்

59 views

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

74 views

செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டம் - குடியரசு தின நாளில் டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டதில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.