ரஜினி அறிவிப்பு...பேசு பொருளான தமிழக அரசியல்
பதிவு : டிசம்பர் 30, 2020, 03:56 PM
தமிழகத்தில் திமுக - அதிமுகவிற்கு மாற்றாக மூன்றாவது அணியை எதிர்பார்த்து காத்திருந்த அரசியல் கட்சிகளுக்கு ரஜினியின் அறிவிப்பு என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(இப்ப இல்லை என்றால் எப்போ...)

இந்த முழக்கத்தோடு, நான் அரசியலுக்கு வருவது உறுதி என, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் முன் முழக்கமிட்ட ரஜினி, தனது உடல் நிலையை காரணம் காட்டி, நான், கட்சி தொடங்கி தொண்டர்களை ஏமாற்றவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டு, அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தலிலும் பேசுபொருளாகி இருந்த நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் அரசியல் களம் காணமலேயே முடிவுரை எழுதிவிட்டார். இந்த சூழல் என்பது அதிமுக - திமுகவிற்கு மாற்று என்று களம் இறங்குபவர்களை யோசிக்கவும் வைத்துள்ளது.  கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியலில் காமராஜருக்கு பிறகு திராவிட கட்சிகளின் ஆதிக்கமே வேரூன்றிவிட்டது. அதிலும் தி.மு.க. - அதிமுக என்ற இருபெரும் கட்சிகளே ஆட்சி அரியணையில் அமரும் வாய்ப்பை பெற்றுள்ளன.  கடந்த 1996ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்திற்கு ஆட்சி மாற்றம் தேவை என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழக அரசியலை தன் பக்கம் திருப்பினார் ரஜினி. அதுவெற்றியும் பெற்றது. அடுத்தடுத்த தேர்தல்களில் ரஜினி குறித்து எதிர்பார்ப்பு அதிகம் இருந்தபோதிலும் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டின் மவுனம் களையாமலே இருந்தார். இந்நிலையில் அதிமுக - திமுக என்ற இருபெரும் கட்சிகளே ஆட்சி கட்டிலில் அமர்ந்தன. கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் இந்த இரண்டு கட்சிகளுக்கு மாறாக அரசியல் மாற்றத்தை, ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம் என்ற முழக்கத்தோடு பல கட்சிகள் களம் இறங்கின. அதிமுக - திமுகவிற்கு மாற்று என்று மதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிகம்யூனிஸ்ட் ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டன. அதே முழக்கத்தோடு பாமகவும், நாம் தமிழர் சீமானும் போட்டியிட்டனர். இறுதியில் அதிமுகவே இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் இருபெரும் தலைவர்களான ஜெயலலிதாவும், கருணாநிதியும் மறைந்தனர். 2016ல் பல்வேறு திசைகளில் பயணித்த கட்சிகள் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக - திமுகவிலேயே ஐக்கியமாயினர். நடிகர் கமல் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களின் நம்பிக்கையை பெறமுடியவில்லை. இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் அரசியல் காட்சிகள் மாற தொடங்கியது. 2021 தேர்தலில் திமுக - அதிமுகவிற்கு பதில் ஒரு மாற்று சக்தியை உருவாக்க பாஜகவும் முயன்று வந்தது. ஆன்மிக அரசியலை முன்னெடுத்த ரஜினி தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்வார்கள் என்ற அரசியல் நோக்கர்களால் பார்க்கப்பட்டு வந்தது. டிசம்பர் 31ம் தேதி தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவிப்பேன் என்ற நடிகர் ரஜினிகாந்த், 29ம் தேதியான செவ்வாய்க்கிழமை கட்சி தொடங்க மாட்டேன் எனக் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இது அதிமுக - திமுகவிற்கு மாற்றாக மாற்று அரசியலை முன்வைக்கின்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் ரஜினியின் இந்த நிலைப்பாட்டால் மாற்றத்தை தேடிய கட்சிகள் மீண்டும் அதிமுக - திமுக கூட்டணியிலேயே ஐக்கியமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

36 views

9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு - 50% வரை பாடத்திட்டங்கள் குறைப்பு

ஒன்பதாம் வகுப்பிற்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

36 views

சைக்கிள் மீது கார் கொடூர மோதல் - சி.சி.டி.வி. வெளியீடு

திருவாரூரில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

333 views

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது"மருத்துவமனை புதிய தகவல்

சசிகலா உடல்நிலை குறித்து கர்நாடகா அரசு மருத்துவமனை புதிய தகவல் வெளியிட்டுள்ளது.

56 views

குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம் - சென்ட்ரலில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

32 views

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.