"பிரிட்டனில் இருந்து இந்தியாவந்தவர்களுக்கு கொரோனா - "பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை என சுகாதார அமைச்சகம் தகவல்
பதிவு : டிசம்பர் 29, 2020, 06:33 PM
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு, உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் சந்தேகத்தின் பேரில், 114 பேரின் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. சோதனை செய்ததில், 6 பேருக்கு உருமாற்றம் அடைந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பெங்களூரை சேர்ந்த மூவர், ஹைதராபாத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும்  புனேவை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில்  டிசம்பர் 23 முதல் வரும் 31-ஆம் தேதி வரை அங்கிருந்து  வரக்கூடிய விமானங்களை மத்திய அரசு தற்காலிகமாக தடை செய்துள்ளது. இதனி​டையே, நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு 33 ஆயிரம்  பயணிகள் வந்துள்ளனர். இந்நிலையில்,  மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து அந்த பயணிகளை தொடர்புகொண்டு,  அவர்களின் மாதிரிகளை  சேகரித்தது. இதில் 114 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மாதிரிகளை புவனேஸ்வர், புனே,  ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ததில் 6 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த 6 பேருக்கும் பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

"மும்பை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை" பாலியல் வன்கொடுமை தொடர்பான தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை தொடர்பான மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

8 views

டெல்லி விரைந்தார் நமச்சிவாயம் - பாஜகவில் இணைய போவதாக தகவல்

பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நமச்சிவாயம் ஜே.பி. நட்டாவை சந்தித்து பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது

37 views

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 11.5%-ஆக இருக்கும் - சர்வதேச நிதி ஆணையம் கணிப்பு

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது.

15 views

டெல்லி விவசாயிகள் போராட்டம் - போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்கும் வீடியோ

விவசாயிகள் பேரணியின்போது டெல்லியில் நங்லோய், நஜப்கார் சாலையில் போலீஸ் வாகனங்களை வன்முறையாளர்கள் சூறையாடிய காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்

59 views

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

74 views

செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டம் - குடியரசு தின நாளில் டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டதில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.