அரசியல் பிரவேசம் இல்லை - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு
பதிவு : டிசம்பர் 29, 2020, 05:19 PM
வரும் 31ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இப்போது அரசியல் பிரவேசம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார்.
அண்ணாத்த படப்பிடிப்பின் போது தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதோடு, ரத்த கொதிப்பில் ஏற்ற இறக்கம் இருந்ததாகவும்  இதே நிலை தொடர்ந்தால் தன்னுடைய மாற்று சிறுநீரகத்தையும் கடுமையாக பாதிக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும் அறிக்கையில் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார். மருத்துவரின் மேற்பார்வையில் 3 நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தன்னுடைய உடல்நிலை காரணமாக அண்ணாத்த படத்தின் தயாரிப்பாளர் படப்பிடிப்பை ஒத்தி வைத்ததாகவும், இதன் காரணமாக பல கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டதாகவும், இவை அனைத்துக்கும் தன்னுடைய உடல் நிலையே காரணம் என ரஜினி தெரிவித்துள்ளார். இதை ஆண்டவன் தனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகவே பார்ப்பதாக கூறியிருக்கும் ரஜினி, கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் ​செய்தால் மக்கள் மத்தியில் தான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது என்று தெரிவித்துள்ளார். 120 பேர் கொண்ட குழுவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 3 நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேர்ந்த சூழலில், பிரச்சாரத்திற்கு சென்றால் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும் என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். தற்போது கொரோனா 2ஆம் அலையாக வந்து கொண்டிருப்பதாக கூறியிருக்கும் அவர், கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தின் போது தன் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் தன்னை நம்பி அரசியல் பயணம் மேற்கொள்ளும் பலரும் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார் தன் உயிர் போனாலும் பரவாயில்லை, கொடுத்த வாக்கை காப்பாற்ற அரசியலுக்கு வருவேன் என சொல்லி இப்போது தன்னை பற்றி தவறாக பேசும் நாலு பேருக்காக தன்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கும் ரஜினிகாந்த், இதை அறிவிக்கும் போது ஏற்பட்ட வலி தனக்கு மட்டும் தான் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய இந்த முடிவு மக்கள் மன்றத்தினருக்கும், கட்சி ஆரம்பிப்பேன் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் என்பதால் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். மக்கள் மன்றத்தினர் கடந்த 3 ஆண்டுகளாக தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு கொரோனா காலத்திலும் மக்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள், அது வீண் போகாது. அந்த புண்ணியம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 3 ஆண்டுகளாக எத்தனையோ விமர்சனங்கள் வந்த போதிலும், தொடர்ந்து தன்னை ஆதரித்து வந்த தமிழருவி மணியனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ரஜினி குறிப்பிட்டுள்ளார். தான் கேட்டுக் கொண்டதற்காக பெரிய கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகி தன்னுடன் பணியாற்ற சம்மதித்த அர்ஜூன மூர்த்திக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் அரசியலுக்கு வராமல் தன்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வேன் என்றும், உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உண்மையையும், வெளிப்படைத்தன்மையையும் விரும்பும், தன் நலனில் அக்கறையுள்ள, அன்பு கொண்ட ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

136 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

62 views

பிற செய்திகள்

"ஸ்டாலினால் கனவு மட்டுமே காண முடியும்" - முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக ஆட்சி கவிழும் என கனவு கண்ட திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக முடியும் என கனவு மட்டுமே காண முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

11 views

ஜன.26ல், 72 வது குடியரசு தின விழா - மெரினா சாலையில் முப்படை ஒத்திகை

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா சாலையில், முப்படையினர் கண்கவர் அணிவகுப்பு நடத்தி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

7 views

உயர்நிலைப் பள்ளிகளாக மாறும் பள்ளிகள் -பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் தகவல்

நடப்பு கல்வி ஆண்டில் 35 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 40 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவதாக, பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.

41 views

மெரினா வர்த்தக மையம் கட்டும் பணி - துணை முதல்வரின் தலைமையில் ஆலோசனை

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள மெரினா வர்த்தக மையம் தொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.

21 views

ஜெயலலிதாவின் நினைவிடம் 27-ம் தேதி திறப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்

44 views

ஜன.22-ல் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் வரும் வெள்ளியன்று, அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

139 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.