பணம், சொத்துக்கள் மீது அதீத ஆசை - 51 வயது பெண்ணுடன் 27 வயது இளைஞர் திருமணம்
பதிவு : டிசம்பர் 27, 2020, 06:35 PM
51 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த 27 வயது இளைஞர், அவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை பகுதியில் உள்ள கரகோணத்தை சேர்ந்தவர் சகா.  51 வயதாகியும் திருமணம் ஆகாத அவர், தன்னுடைய தாயாரை பார்த்துக்கொண்டு அப்பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். அவர் தங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிர் செய்து வந்துள்ளார். நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருந்த சகாவின் சொத்துக்கள் மீது ஆசைக்கொண்ட பத்தாங்கல் பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் அருண், அவருக்கு காதல் வலைவீசியுள்ளார். இதனை உண்மையென நம்பிய சகாவும் காதலிக்க தொடங்கியிருக்கிறார். சகாவின் பணம், சொத்துக்கள் மீது ஆசைக்கொண்ட அருண் சில மாதங்களுக்கு முன்னர் அவசர அவசரமாக அவரை  அப்பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.  இந்த திருமணத்திற்கு தன்னுடைய குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அருண் சகாவின் வீட்டில் வீட்டோடு மாப்பிளையாக குடும்பம் நடத்த தொடங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் சகா தன்னுடைய திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அருண், அவருடன் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று சகாவை மின்சார அடுப்பு மூலம் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துவிட்டு ஊர் மக்களிடம் மனைவி இறந்துவிட்டதாக அருண் நாடமாடியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் அருணிடம் விசாரணையை மேற்கொண்ட போது, மனைவியை கொலை செய்ததாக அருண் ஒப்புக்கொண்டுள்ளார். வயது முதிர்ந்த பெண்ணை திருமணம் செய்தது வெளியே தெரியவந்ததும் பல நண்பர்கள் கேலி செய்ததால் அவமானம் ஏற்பட்டதாகவும், ஆத்திரத்தில் சகாவை மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிட்டதாகவும் அருண் கூறியிருக்கிறார். சொத்திற்கு ஆசைப்பட்டு வயது முதிர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞர், அவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

231 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

194 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

36 views

9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு - 50% வரை பாடத்திட்டங்கள் குறைப்பு

ஒன்பதாம் வகுப்பிற்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

35 views

சைக்கிள் மீது கார் கொடூர மோதல் - சி.சி.டி.வி. வெளியீடு

திருவாரூரில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

331 views

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது"மருத்துவமனை புதிய தகவல்

சசிகலா உடல்நிலை குறித்து கர்நாடகா அரசு மருத்துவமனை புதிய தகவல் வெளியிட்டுள்ளது.

55 views

குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம் - சென்ட்ரலில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

32 views

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.