மீண்டும் திரையரங்கில் வெளியாகும் 'புதுப்பேட்டை' - 31ல் வெளியாகிறது புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்
பதிவு : டிசம்பர் 26, 2020, 02:18 PM
மாற்றம் : டிசம்பர் 26, 2020, 02:26 PM
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படங்கள் தற்போது மீண்டும் திரையரங்கில் வெளியாக உள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படங்கள் தற்போது மீண்டும் திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த இரு படங்களும், வெளியாகும் போது பெரிய வரவேற்பு கிடைக்காத நிலையில், தற்போது ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து, வரும் 31ஆம் தேதி இந்த இரு திரைப்படங்களும் மீண்டும் தியேட்டரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சசிக்குமாரின் 'பகைவனுக்கு அருள்வாய்' - முதல் புகைப்படம்

நடிகர் சசிக்குமார் நடிக்கும் பகைவனுக்கு அருள்வாய் படத்தின் முதல் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஷ் இந்த படத்தை இயக்குகிறார். வாணி போஜன், பிந்து மாதவி மற்றும் நாசர் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அண்ணாத்த பட நடிகைகள் 
நாய்க்குட்டியுடனான படத்தை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் 

கொரோனா பாதிப்பு காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட போதிலும் படத்தில் நடித்த நடிகைகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. அதேநேரம் ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என உறுதியான போதிலும் சோர்வு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார். இருந்தபோதிலும் அண்ணாத்த படத்தின் நடிகைகளான நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா, அந்த படங்களை பகிர்ந்துள்ளார். இதேபோல் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும் கீர்த்தி சுரேஷ், தன் செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதேபோல் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ், தன் நண்பர் ஒருவரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பதிவை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் அண்ணாத்த படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரியவருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

232 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

197 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

ஆஸ்கர் நோக்கி... சூர‌ரைப்போற்று

ஆஸ்கர் விருதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது சூர‌ரைப்போற்று திரைப்படம்.. இந்த சூழலில் ஆஸ்கர் விருது குறித்தும், அதை வெல்ல சூர‌ரைப்போற்று திரைப்படம் கடக்க வேண்டிய தொலைவு குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

196 views

ஓ.டி.டி-ல் வெளியாகும் விஜய்யின் "மாஸ்டர்"

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

19 views

"கர்ணன் - அனைத்தும் கொடுப்பான்" : அப்டேட் கொடுத்த சந்தோஷ் நாராயண‌ன்

கர்ண‌ன் திரைப்படத்தை பார்த்து பிரம்மித்து போனதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண‌ன் கூறியுள்ளார்.

19 views

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

74 views

GODZILLA VS KONG டிரெய்லர் வெளியீடு - சமூக வலைத்தளங்களில் வரவேற்பு

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் GODZILLA VS KONG எனும் ஆங்கிலத்திரைப்படம் வெளியாக உள்ளது.

31 views

நவ. 4-ம் தேதி அண்ணாத்த வெளியீடு - விஜய்யின் தளபதி 65 வெளியாகுமா..?

ரஜினியின் அண்ணாத்த படம், தீபாவளிக்கு ரிலீசாகும் என்று, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.