திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் ஆகிறார் கல்லூரி மாணவி - 21 வயது பெண் ஆர்யா ராஜேந்திரன், மேயர் பதவிக்கு தேர்வு
பதிவு : டிசம்பர் 26, 2020, 12:12 PM
திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக வழக்கறிஞர், பேராசிரியர் போன்றோரை பதவியில் அமர செய்த மார்க்சிஸ்ட் கட்சி, இந்த முறை ஒரு கல்லூரி மாணவியை மேயராக்க முன்வந்துள்ளது. அந்த மாணவி யார், அவரின் பின்னணி குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
பா.ஜ.க. - கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கடும் போட்டியுடன் கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது,  உள்ளாட்சித் தேர்தல்.100 வார்டுகள் கொண்ட தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 51 வார்டுகளையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 34 வார்டுகளையும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 வார்டுகளையும், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 5 வார்டுகளையும் கைப்பற்றின. 
மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி பெரும்பான்மை இடத்தை மீண்டும் பிடித்துள்ள நிலையில், நேற்று அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது இளம்பெண்ணை மார்க்சிஸ்ட் கட்சி தேர்வு செய்துள்ளது.  முடவன்முகள் வார்டு கவுன்சிலராக வெற்றிபெற்ற ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரத்தில் உள்ள ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் பிஎஸ்சி கணித பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஆர்யாவின் தந்தை ராஜேந்திரன், எலக்ட்ரீசியனாகவும்,  தாய் ஸ்ரீலேகா எல்ஐசி முகவராகவும் பணியாற்றுகின்றனர். சாதாரண குடும்பத்தில் இரண்டாவது மகளாக பிறந்த ஆர்யா,  மார்க்சிஸ்ட் கட்சியின்  மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர், பாலர் சங்கத்தின் மாநில தலைவர், மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளுடன் அரசியல் பயணத்தை ஒருபுறமும் கல்லூரி படிப்பை மறுபுறமும் தொடர்ந்து வருகிறார். வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ள மேயர் தேர்தலில் ஆர்யா ராஜேந்திரன் களம் கண்டு வாகை சூடுவார் என்றும், இந்தியாவிலேயே  மிகக் குறைந்த வயது கொண்ட மேயராக உருவாகிறார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெருமிதத்துடன் கொண்டாடுகின்றனர். தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் பதவியை தொடர்ந்து தக்க வைத்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை வழக்கறிஞர், பேராசிரியர் போன்றோரை அரியணை ஏற்றியது. மாநிலத் தலைநகரத்தின் நிர்வாகத் தலைவராக வரலாறு படைக்க மிக இளைய அரசியல்வாதியான ஆர்யா ராஜேந்திரனுக்கு வாய்ப்பளித்திருக்கிறது,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
இது, அடுத்த ஆண்டு நடைபெறும் மாநில சட்டசபை தேர்தலை ஒட்டிய முக்கியமானது முடிவு என்றே கேரளாவின் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

257 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

207 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

170 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

140 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

72 views

பிற செய்திகள்

நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

கேரளாவைச் சேர்ந்த 98 வயதான நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி உடல்நலக்குறைவால் காலமானார்.

13 views

தனியார்மயமாகும் திருவனந்தபுரம் விமான நிலையம் - கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

29 views

"வேளாண் சட்டத்தை நிறுத்தி வைக்க தயார்" - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

டெல்லியில் உள்ள விக்யான் பவனில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில், விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

28 views

ஜோ பைடன், கமலா ஹாரிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

23 views

"டிராக்டர் பேரணிக்கான அனுமதி :டெல்லி காவல்துறைக்கே அதிகாரம்" - உச்சநீதிமன்றம்

குடியரசு தினத்தன்று நடத்தப்படும், டிராக்டர் பேரணியை அனுமதிக்க டெல்லி காவல்துறைக்கே அதிகாரம் என்றும், இதில் தலையிட போவதில்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

24 views

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் : கிராமம் - நகரம் வேறுபாட்டை குறைக்க முயற்சி பிரதமர் மோடி பேச்சு

கிராமத்திற்கும், நகரத்திற்குமான வேறுபாட்டை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.