பாக்ஸிங் டே டெஸ்ட்-ல் இந்தியா-ஆஸி பலப்பரீட்சை - ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா?
பதிவு : டிசம்பர் 26, 2020, 08:44 AM
வரலாற்று சிறப்பு மிக்க பாக்சிங் டே டெஸ்ட் போட்டி என்றால் என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
பாக்சிங் டே என்பதற்கு பல விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில், கிறிஸ்துமஸ் அன்று தேவாலயங்களில் பாக்ஸ் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அதில் கிறிஸ்தவர்கள் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள். அந்த அட்டைப்பெட்டி 26 ஆம் தேதி பிரிக்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும். 
இதேபோல, தங்கள் வீடுகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு, உரிமையாளர்கள் கிறிஸ்துமஸ் பரிசு பாக்ஸை வழங்கும் தினம் என்பதால் பாக்சிங் டே என அழைக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர்.
இவ்வாறு டிசம்பர் 26 ஆம் தேதி அதாவது பாக்சிங் டே அன்று நடைபெறும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா , நியூசிலாந்து பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா  - இலங்கை ஆகிய அணிகள், இன்றைய தினம் அணிகள் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. பாக்சிங் டேயில் நடைபெறும் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவிற்கு மிகப்பெரிய கவுரவ போட்டியாகவே பார்க்கப்படுகிறது. 1980 ஆம் ஆண்டு முதலே பாக்சிங் டே டெஸ்ட் தொடரை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளது. உலகின் பாரம்பரியமிக்க மற்றும் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பெரும்பாலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா.பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி கடந்த 20 ஆண்டுகளாக 3 தொடரில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணி கேப்டன் கோலி தலைமையிலான அணியுடன் கண்ட தோல்வியும் ஒன்று..இந்த ஆண்டு நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. முதல் போட்டியில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான தோல்வியை பதிவுசெய்துள்ளது இந்தியா..இந்த நிலையில், ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க இந்த அதிரடி மாற்றங்களுடன் இந்திய அணி களம் கண்டுள்ளது ... பாக்சிங் டே டெஸ்ட் தொடரில் கேப்டன் கோலி பங்கேற்கவில்லை...ரோகித் சர்மா தனிமைபடுத்தப்பட்டுள்ளதால், அவரும் போட்டியில் பங்கேற்கவிலை. இதனால் ரகானே தலைமை ஏற்றுள்ளார். ரகானே தலைமையில் இந்திய அணி  ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் தோற்றதே இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், சஹா ஆகியோர் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.  சுப்மான் கில் மற்றும் சிராஜ் தங்களது அறிமுக போட்டியில் களம் இறங்கியுள்ளனர். ஜடேஜா மற்றும் ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

199 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

162 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

136 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

62 views

பிற செய்திகள்

நடராஜன் இல்லை - தமிழக ரசிகர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்து அணியுடனான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

34 views

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் : நடராஜன் இல்லை - தமிழக ரசிகர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்து அணியுடனான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

122 views

முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் வாகனை வாட்டி வதைக்கும் இந்திய ரசிகர்கள்

இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் வாட்டி வதைத்து வருகின்றனர்.

452 views

"இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்" - எச்சரித்த ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர்

இந்தியர்களை ஒருநாளும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் எச்சரித்துள்ளார்.

38 views

டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.5 கோடி வெகுமதி - பிசிசிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா, கைப்பற்றி உள்ள நிலையில், இந்திய அணிக்கு, பிசிசிஐ, 5 கோடி ரூபாயை வெகுமதியாக அறிவித்து உள்ளது.

25 views

சொந்த மண்ணில் ஆஸி.யை வென்ற இந்திய அணி - கோப்பையை நடராஜன் கையில் கொடுத்த ரகானே

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி போர்டர் கவாஸ்கர் கோப்பையை வென்ற இந்திய அணி, நடாரஜன் கையில் கொடுத்த‌து.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.