வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் - போலீசாரின் தடுப்புகளை உடைத்து எறிந்த டிராக்டர்
பதிவு : டிசம்பர் 26, 2020, 08:33 AM
உத்தரகாண்ட் மாநிலம், நகர் மாவட்டத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
இதனை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது போலீசாரின் தடுப்புகளை உடைத்து கொண்டு டிராக்டரை, விவசாயி செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

"மேற்கு வங்க விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறார்" -பிரதமர் மோடி மீது, முதல்வர் மம்தா பானர்ஜி புகார்

பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்க விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற தமது விருப்பத்தை பகிரங்கமாகக் கூறினாலும், உண்மையில் அவர் அரை உண்மையுடன் மக்களை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாக புகார் கூறியுள்ளார். 

சமூக விரோதிகள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்"
"10 அடி பள்ளம் தோண்டி புதைத்து விடுவேன்"
மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை 

மத்திய பிரதேசத்தில், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் வெளியேற வேண்டும் என அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இல்லையென்றால், மாஃபியா மற்றும் சமூக விரோதிகளை, 10 அடி பள்ளம் தோண்டி புதைத்து விடுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா மொத்த பாதிப்பு - 7,32,114 ஆக உயர்வு
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை - 2930 ஆக அதிகரிப்பு

கேரளாவில், புதிதாக 5 ஆயிரத்து 397 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  7 லட்சத்து 32 ஆயிரத்து114 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 16 பேர் மரணமடைந்த நிலையில், கேரளாவில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 930 ஆக உயர்ந்துள்ளது

மக்கள் நெருக்கடி மிகுந்த தாராவி பகுதி
 முதல்முறையாக யாருக்கும் கொரோனா பரவவில்லை

தமிழர்கள் வாழும் மும்பை தாராவி பகுதியில், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. ஆனால், வெள்ளிக்கிழமையன்று வெளியான அறிக்கையில், முதல் முறையாக, அந்த பகுதியில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என கூறப்பட்டுள்ளது. தாராவியில் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை என்பது, பல்வேறு  தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 



தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

232 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

197 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

180 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

"மும்பை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை" பாலியல் வன்கொடுமை தொடர்பான தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை தொடர்பான மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

8 views

டெல்லி விரைந்தார் நமச்சிவாயம் - பாஜகவில் இணைய போவதாக தகவல்

பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நமச்சிவாயம் ஜே.பி. நட்டாவை சந்தித்து பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது

37 views

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 11.5%-ஆக இருக்கும் - சர்வதேச நிதி ஆணையம் கணிப்பு

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது.

15 views

டெல்லி விவசாயிகள் போராட்டம் - போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்கும் வீடியோ

விவசாயிகள் பேரணியின்போது டெல்லியில் நங்லோய், நஜப்கார் சாலையில் போலீஸ் வாகனங்களை வன்முறையாளர்கள் சூறையாடிய காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்

59 views

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

74 views

செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டம் - குடியரசு தின நாளில் டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டதில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.