சென்னையை தொடர்ந்து மதுரையில் அடுத்த அவலம் - பெற்றோரை இழந்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்
பதிவு : டிசம்பர் 24, 2020, 03:43 PM
சென்னையில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் அதிர்வலைகளே இன்னும் அடங்காத நிலையில், அதை விட பன்மடங்கு பூதாகரமான சம்பவம் ஒன்று மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ளது..
சில தினங்களுக்கு முன் சென்னையில் 16 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 20க்கும் மேற்பட்டோர் கைதான நிலையில், இன்னும் கைது படலம் முடிந்தபாடில்லை... இந்த தகிப்பு ஆறுவதற்குள், மதுரையில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது...பெற்றோரை இழந்த அந்த சிறுமி மதுரை கோரிப்பாளையத்தையை சேர்ந்தவர்... 2015 ஆம் ஆண்டில் பத்து வயது சிறுமியாக உறவினர் ஜெயலெட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், 13 வயதில் பூப்படைந்தபோது, ஜெயலட்சுமியின் கோர முகம் வெளிப்பட்டுள்ளது.பாலியல் தொழிலில் கொடிகட்டி பறந்த ஜெயலெட்சுமி மற்றும் அவருக்கு கீழ் தொழில் செய்யும் அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி, சின்னதம்பி என பலரும் அந்த சிறுமியை வைத்து பணம் பார்த்துள்ளனர். சிறுமிக்கு பாலியல் துன்பம் இழைத்தவர்களை கைது செய்ய வேண்டுமென்றால் ஒரு புதிய சிறையையே கட்ட வேண்டும் என்ற அளவுக்கு கொடுமை நடைபெற்றிருக்கிறது. ஆம்... 3 ஆண்டுகளாக 600 பேரின் பாலியல் வேட்கைக்கு இரையானதாக  கதறுகிறார் அந்த சிறுமி... மதுரை சிறுமியின் வாக்குமூலத்தை கேட்டு காவல் துறையும் அதிர்ந்து போய் கிடக்கிறது. அதே சமயம் போலீசார் பல முறை மாறுவேடங்களில் சென்று கைது செய்ய முயற்சித்தும், கண்இமைக்கும் நேரத்தில் டிமிக்கி கொடுத்திருக்கிறார் ஜெயலெட்சுமி... மதுரை விஐபி நகர் பகுதியில் சிறுமியை மீட்ட போது, சரவணபிரபு என்பவர் மட்டுமே போலீசார் வசம் சிக்கியுள்ளார். 600 பேரையும் பிடித்தே ஆக வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு தனிப்படையும் அமைத்துள்ளனர், போலீசார்... சென்னை, மதுரை என அடுத்தடுத்து வெளியாகும் சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள், பெற்றோர் நெஞ்சை பதற வைக்க,  இன்னும் வெளிஉலகுக்கு தெரியாமல் இதுபோல பல சிறுமிகள் மாட்டிக் கொண்டிருக்கின்றனர் என அதிர வைக்கின்றனர் குழந்தைகள் நல ஆர்வலர்கள்... 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

257 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

207 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

170 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

140 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

72 views

பிற செய்திகள்

அதிமுக அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு

மதுபான கடைகளை மூடுவோம் என்ற அதிமுக அரசு தற்போது கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்ததாகவும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டினார்

4 views

புள்ளி விவரங்களை சரியாக எழுதி வையுங்கள் - ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி

திமுக தலைவர் ஸ்டாலின் புள்ளிவிவரங்களை சரியாக எழுதி வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுகளை கூறவேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

26 views

ஆன்லைன் சூதாட்டம் - அவசர தடை ஏன்?

தற்கொலைகளை தடுக்க உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படியே சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது.

8 views

4 மாத மின்நுகர்வு மொத்தமாக கணக்கீடு - தமிழக அரசுக்கு எதிராக மேல்முறையீடு

தமிழகத்தில் 4 மாத மின்சார பயன்பாட்டுக்கு மொத்தமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

21 views

"துறைமுக கட்டுமானம் சரியில்லை" : திமுக ஆட்சியில் சீரமைக்கப்படும்- கனிமொழி

மீனவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப தேங்காய்பட்டணம் துறைமுகம் சீரமைக்கப்படும் என திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழி உறுதி அளித்துள்ளார்.

28 views

பெண்ணிடம் செல்போன் பறித்துச் சென்ற இளைஞர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சேலம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இளைஞர்கள் செல்போன் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.